உதவி வழங்குபவர்கள் தொடர்பு கொள்ளவும்!!

அம்­பா­றை­யி­லும் மற்­றும் கண்டி மாவட்­டத்­திலும் வன்­மு­றை­ யால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­கள் மற்­றும் வர்த்­தக நிலை­யங்­கள் யாவும் அர­சால் மறு ­சீ­ர­மைக்­கப்­பட்­டது. அதே­வே­ளை­யில் அவ­ச­ர­மான உத­வி­களை முஸ்­லிம் சம­யப் பண்­பாட்­ட­லு­வல்­கள் ஊடா­க­வும் மேற்­கொள்ள முடி­யும்.

அவ்­வாறு உத­வி­க­ளைச் செய்ய விரும்­பு­பவர்­களைத் தொடர்­பு­கொள்­ளு­மாறு முஸ்­லிம் சமயப் பண்­பாட்­ட­லு­வல்­கள் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் எம்.ஆர்.எம்.மலீக் கேட்­டுக் கொண்­டுள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குப் பொரு­ளா­க­வும் பண­மா­க­வும் சேக­ரித்து வழங்­கும் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை தனிப்­பட்ட ரீதி­யா­க­வும், ஊர் ஜமா­அத் ரீதி­யா­க­வும், நிறு­வ­னங்­கள் ரீதி­யா­க­வும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

ஒரு ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட அடிப்­ப­டை­யில் பாதிக்­கப்­பட்ட எல்லா இடங்­க­ளை­யும் சென்­ற­டைய வேண்­டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பா­கும். முஸ்­லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்­கள் திணைக்­க­ளம் முழு­மை­யான மதிப்­பீ­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட அந்­தந்தப் பிர­தேச செய­ல­கம் ஊடாகத் தக­வல்­க­ளைத் திரட்­டும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றோம். பொது­வாகப் பாதிக்­கப்­பட்ட எல்லா முஸ்­லிம் மக்­க­ளும் மனம் நோகா­மல் உத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்ள வேண்­டும்.

ஒரு வார கால­மாக உணவு வச­தி­யின்றி வீடு­க­ளி­லும், ஏதிலி நிலை­யங்­க­ளி­லும் முஸ்­லிம்­கள் முடங்கி வாழ்­கின்­றனர். பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­கள் தொழிலை இழந்­துள்­ள­னர். அன்­றா­டம் கடை­க­ளுக்­குச் சென்று கூலித்­தொ­ழில் செய்து வந்­த­வர்­க­ளின் வாழ்க்கை முற்­றாக அடி­பட்டு நிர்க்­­கதி­யாகியுள்­ளனர். வீடு வாசல்­களை இழந்து வேறு இடங்­க­ளி­லும் குடு­பத்­த­வர்­கள் வீடு­க­ளி­லும் பலர் வசிக்­கின்­றனர்.

இந்த மக்­க­ளுக்­கான உத­வி­களை முஸ்­லிம் சம­யம் கலா­சாரத் திணைக்­க­ளத்­தின் நிதி­யத்­தின் ஊடாக முன்­னெ­டுக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளோம்.
மனி­தா­பி­மான உத­வி­க­ளைப் புரிய விரும்­பு­ப­வர்­கள் ஒரு ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட நிறு­வன ரீதி­யாகச் செயற்­ப­ட­வுள்ள சகாய நிதி­யத்துக்கு உத­வி­களை வழங்கி வைக்­கு­மாறு வேண்­டு­கோள் விடுக்­கின்­றோம் – – என்­றார். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 011 266 9997 என்ற இலக்­கத்­துக்குத் தொடர்பு கொள்ள முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like