மனைவி மீது சந்தேகம் -இளைஞன் மீது கத்திக்குத்து!!

மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன், இளைஞன் ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் மோதரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏனமுல்ல ரந்தி உயன பிரதேசத்தில் நேற்று இரவு நடந்தது என்று மோதரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர் ஒருவர் குறித்த இளைஞன் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை வாசல வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

பொலிஸ் விசாரணைகளில் தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் பலிவாங்கும் நோக்கத்தில் இளைஞனை சந்தேகநபர் கத்தியால் குத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபைரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like