சத்தியப் பிரமாண நிகழ்வை ஒத்திவைத்தது கூட்டமைப்பு!!

அரசிதழ் வெளியாகாததால் கட்சி தீர்மானம்

 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தியப் பிர­மாண நிகழ்வு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அர­சி­த­ழில் வெளி­யி­டப்­ப­டா­மை­யா­லேயே பிற்­போ­ட­ வேண்­டி­யுள்­ளது என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­பி­ர­மாண நிகழ்வை யாழ்ப்­பா­ணம், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­க­ளில் இன்று நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த நிகழ்­வு­டன் இணைத்து, கட்­சி­யின் புதிய சுதந்­தி­ரன் பத்­தி­ரிகை வெளி­யீட்­டை­யும் மேற்­கொள்­ளத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

உள்­ளூ­ராட்­சி ­மன்­றங்­க­ளுக்கு தெரி­வான உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் நேற்­று­வ­ரை­யில் வெளி­யா­க­வில்லை. அத­னால் சத்­தி­ய­பி­ர­மாண நிகழ்வு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும் பத்­தி­ரிகை வெளி­யீடு திட்­ட­மிட்­ட­வாறு இன்று நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like