தமிழர்களின் வழிக்கு வருமா உலகநாடுகள்?

உலக நாடு­க­ளுக்­கும், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை போன்ற பெரு மன்­றங்­க­ளுக்­கும் தான் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாது தட்­டிக்­க­ழிப்­ப­தற்­கா­கத் தாம­திப்­பதை ஒரு தந்­தி­ர­மா­கக் கடைப்­பி­டிக்­கி­றது இலங்கை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஸ் ரீபன் ராப்.

ஸ் ரீபன் ராப் ஒரு அமெ­ரிக்க வழக்­கு­ரை­ஞர். அமெ­ரிக்க ராஜாங்­கத் திணைக்­க­ளத்­தின் பூகோள குற்­ற­வி­யல் நீதி அலு­வ­ல­கத்­தில் போர்க்­குற்ற விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­கத் தூத­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். தனது பத­விக் காலத்­தில் இலங்­கைக்கு வருகை தந்து வடக்­கின் பல இடங்­க­ளுக்­கும் நேரில் சென்­ற­வர். யாழ்ப்­பா­ணத்துக்கும் வருகை தந்­துள்­ளார்.

அந்­தப் பய­ணத்­தில் முல்­லைத்தீவுக்குச் சென்ற அவர், இறு­திப் போர் நடை­பெற்ற பகு­தி­க­ள் ஒன்­றி­லி­ருந்து எடுத்த படத்­து­டன், நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்­கள் இரா­ணு­வத்­தின் செல் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்ட இடம் என்ற விளக்­க­மும் அமெ­ரிக்க தூத­ரக ருவிற்­ற­ரில் பதி­வி­டப்­பட்­டது.

இலங்­கை­யில் போர்க்­குற்­றங்­களே நிக­ழ­வில்லை என்று கொழும்பு அரசு மறுத்து வந்த நிலை­யில், போர்க்­குற்­றம் என்று ஆதா­ரப்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யி­லான பதிவை வெளிப்­ப­டை­யா­கச் செய்­யு­ம் அளவுக்கு இலங்­கைப் போர் மற்­றும் போர்க்­குற்­றங்­கள் குறித்து மிக­வும் பரிட்­ச­ய­மா­ன­வர் ராப்.
அவரே கொழும்பு அரசு மீது இந்­தக் குற்­றச்­சாட்டை தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

கொழும்­பில் மாறி மாறி வரும் ஆட்­சி­யா­ளர்­கள் அனை­வ­ருமே இப்­ப­டித்­தான் காலத்தை இழுத்­த­டித்து இழுத்­த­டித்து, தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்­வைத் தரா­மல் கைக­ழு­வு­கி­றார்­கள் என்­ப­தைத் தமி­ழர்­கள் மீண்­டும் மீண்­டும் காட்­டுக் கத்­த­லா­கக் கத்தி வரு­கி­றார்­கள்.

பன்­னாட்­டுச் சமூ­கம் கொழும்பு அரசு தொடர்­பில் மென்­மைப் போக்­கைக் கடைப்­பி­டிக்க முனை­யும்­போ­தெல்­லாம் கால அவ­கா­சம் கொடுக்­கா­தீர்­கள் இவர்­கள் காலத்தை இழுத்­த­டிப்­ப­தற்­குத்­தான் இப்­ப­டிக் கேட்­கி­றார்­கள் என்று தமி­ழர்­கள் தரப்­பி­லி­ருந்து ஐ.நாவுக்­கும் ஏனைய நாடு­க­ளுக்­கும் உரத்­துச் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், அவை­யெல்­லாம் செவி­டன் காதில் சங்கு ஊதி­ய­தைப் போன்­று­தான் முடிந்­தி­ருக்­கி­ன்றன.

இப்­போது அமெ­ரிக்­கர் ஒரு­வரே அதனை ஒத்­துக்­கொண்டு, பட்டு உணர்ந்து தெரி­வித்­தி­ருக்­கி­றார். ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொடர் நடை­பெற்று வரும் நிலை­யில் அதை­யொட்டி நடை­பெற்ற பக்க நிகழ்வு ஒன்­றில் அவர் உரை­யாற்­றி­னார். ‘‘பெரும் கொடு­மை­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­றலை வழங்­கு­வ­தற்கு அனைத்­து­லக முறைமை எவ்­வாறு தோல்வி கண்­டது: சிறி­லங்­கா­வில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக நீடிக்­கும் சட்­ட­வி­ரோத தடுத்து வைப்பு, சித்­தி­ர­வதை, பாலி­யல் வன்­மு­றை­கள்’’ என்ற தலைப்­பில் அவர் உரை­யாற்­றி­னார். அதி­லேயே கொழும்­பின் தந்­தி­ரத்­தை­யும் அவர் வெளிப்­ப­டுத்­தி­னார்.

தற்­போது பத­வி­யில் இருக்­கும் மைத்­திரி– – ரணில் அரசு, பத­வி­யேற்­ற­பின்­னர் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்தை 2 வரு­டங்­க­ளுக்­குள் செயற்­ப­டுத்­தா­மல் மீண்­டும் 2 வருட கால அவ­கா­சத்தை வழங்­கி­ய­போதே தமி­ழர்­கள் தரப்­பி­லி­ருந்து அதற்­குக் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. ஆனா­லும் கொழும்­பைத் தொடர்ந்­தும் தமது பிடிக்­குள் வைத்­தி­ருப்­பது என்­கிற கார­ணத்­தைச் சொல்­லிக்­கொண்டு கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டது.

ஆனால், எதிர்­பார்த்­த­ப­டியே அந்­தக் கால அவ­கா­சத்­துக்­குள்­ளும் எத­னை­யும் செய்­யும் நோக்­கம் கொழும்­புக்கு இல்லை என்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது. இந்த நிலை­யி­லேயே காலத்­தைத் தாம­திப்­பதை ஒரு தந்­தி­ர­மாக அரசு பயன்­ப­டுத்­து­கி­றது என்­கிற உண்­மையை மேற்­கு­ல­கத்­த­வ­ரான ராப் கூறி­யி­ருக்­கி­றார்.

எனவே அவர் கூறி­யி­ருப்­ப­தைப் போன்று ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய நாடு­கள், இலங்­கை­யைப் பொறுப்­புக்­கூ­ற­வைப்­ப­தில் கடு­மை­யான நிலைப்­பாட்டை எடுக்­க­வேண்­டும். அது இல்­லா­மல் இலங்­கை­யில் நிரந்­தர அமை­தியை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­கள் கிஞ்­சித்­தும் நக­ர­மாட்டா என்­பது திண்­ணம். இனி­யா­வது உல­கம் தமி­ழர்­க­ளின் வழிக்கு வர­வேண்­டும்.

You might also like