சென். பற்­றிக்ஸ் மகு­டம் சூடி­யது!!

யாழ்ப்­பா­ணம் கல்­வி­வ­ல­யப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான எல்லே தொட­ரில், 20 வயது ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­திம் நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து புத்­தூர் வாத­ர­வத்தை விக்­னேஸ்­வரா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி 26 பந்­து­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து ஓர் ஓட்­டத்தை மாத்­தி­ரம் பெற்­றது. ரதீ­சன் அந்த ஓட்­டத்­தைப் பெற்­றுக்­கொ­டுத்­தார்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய புத்­தூர் வாத­ர­வத்தை விக்­னேஸ்­வரா வித்­தி­யா­லய அணி ஓட்­ட­மெ­த­னை­யும் பெறா­மல் சகல இலக்­கு­க­ளை­யும் இழக்க ஓர் ஓட்­டத்­தால் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது. மூன்­றா­மி­டத்தை கொழும்­புத்­துறை இந்து மகா வித்­தி­யா­லய அணி பெற்­றது.

You might also like