பத­வி­யில் தொடர புடி­னுக்கு வாய்ப்பு!!

ரஷ்யாவின் அதி­பர் தேர்­தல் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், இந்­தத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­னணி வேட்­பா­ளர் ஒரு­வ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் விளா­டி­மிர் புடி­னுக்­கான வாய்ப்பு மேலும் அதி­க­ரித்­தது.

ரஷ்ய அதி­ப­ருக்­கான முதல் கட்­டத் தேர்­தல் எதிர்­வ­ரும் ஞாயிற்­றுக் கி­ழமை நடத்­தப்­ப­டு­கி­றது. எவ­ரும் பெரும்­பான்மை அதா­வது பதி­வா­கும் வாக்­கு­க­ளில் 50 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான வாக்­கு­க­ளைப் பெறா­விட்­டால் ஏப்­ரல் மாதம் 8ஆம் திகதி இரண்­டாம் கட்­டத் தேர்­தல் நடத்­தப்­ப­டும்.

முத­லாம் கட்­டத் தேர்­த­லில் முத­லிரு இடங் க­ளைப் பிடித்­த­வர்­கள் மட்­டுமே இரண்­டாம் கட்­டத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வார்­கள். 2012ஆம் ஆண்டு நடை­பெற்ற அதி­பர் தேர்­த­லில் புடின் 64 வீத வாக்­கு­க­ளைப் பெற்று வெற்­றி­பெற்­றார். இந்­தத் தேர்­த­லில் புடினின் வெற்றி முத­லா­வது சுற்­றில் தீர்­மா­னிக் கப்­ப­டாது என்­றும் அது அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது சுற்­று­வரை செல்­லும் என்று கருத்­துக்­க­ணிப்­புக்­கள் வைக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து புடி­னுக்கு கடும் சவால் வழங்­கு­வார் என்று குறிப்­பி­டப் பட்ட எதிர்­கட்­சித் தலை­வர் அலெக்சி நவால்னி தேர்­த­லில் போட்­டி­யி­டத் தடை விதிக்­கப்­பட்­டார். நவால்னி மீது ஏகப்­பட்ட வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­மை­யைக் கார­ணம் காட்­டியே அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்து.

புடி­னுக்கு போட்­டி­ய­ளிக்­கக்­கூ­டி­ய­வ­ராக பாவெல் என்ற வேட்­பா­ளர் அடை­யா­ளம் காணப்­பட்­டார். இதை­ய­டுத்து பாவெ­லும் போட்­டி­யிட நேற்­று­முன்­தி­னம் தடை விதிக்­கப்­பட் டது. இது பன்­னாட்டு அரங் கில் பல அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பல­மான எதிர்ப்­புக்­கள் எவை­யும் இல்­லா­மல் கள­ மி­றங்­கும் புடின், பத­வி­யைத் தக்­க­வைக்க கூடு­தல் வாய்ப்­புள்­ளது என்று கரு­தப்­ப­டு­கி­றது.

You might also like