நாயாற்றில் மீனவர்களைத் தேட வானுர்திப் படை!!

முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு நடவடிக்கை

முல்­லைத்­தீவு, நாயாற்­றில் தொழி­லுக்­குச் சென்ற 3 மீன­வர்­கள் கரை திரும்­ப­வில்லை. ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த இவர்­க­ளைத் தேடும் பணி­கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன.

தேடுதல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வானூர்திப் படையின் உதவியை நாடியுள்ளது எனத் தெரியவருகிறது.

நீர்­கொ­ழும்­பைச் சேர்ந்த 3 மீன­வர்­களே கரை திரும்­ப­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மில்­ராஸ் மிரண்டா (வயது-51), இமா­னு­வேல் மிரண்டா (வயது-48), மிது­ற­தன் மிரண்டா (வயது-24) ஆகி­யோரே கரை­தி­ரும்­ப­வில்லை. ஒரு பட­கில் இவர்­கள் தொழி­லுக்­குச் சென்­றுள்­ள­னர். நேற்­று­முன்­தி­னம் நண்­ப­கல் கரை திரும்ப வேண்­டி­ய­வர்­கள் இது­வரை கரை­தி­ரும்­ப­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நாயாற்­றைச் சேர்ந்த மீன­வர்­கள் நேற்­றுக் காலை பட­கு­க­ளில் தேடு­தல் நடத்­தி­ய­ போ­தும் அது பய­ன­ளிக்­க­வில்லை. மீன­வர்­க­ளைத் தேடும் பணி­கள் தொடர்­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வழ­மை­யாக 8 முதல் 10 பாகத்­தில் வளை வளைப்­பதே வழமை என்­றும், இவர்­கள் 18 பாகத்­தில் வலை வளைத்­து­விட்டு வலையை எடுக்­கச் சென்­ற­போதே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது என்­றும் பிர­தேச மீன­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

அதே­வேளை, நேற்­று­முன்­தி­னம் கடல் சீற்­றம் அதி­க­மா­கக் காணப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்தோடு காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்படைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

You might also like