முகநூல் நிறுவனக் குழு இலங்கை வருகிறது !!

முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை வியாழக்கிழமை இலங்கை வருகிறது. அன்றைய தினம் அந்தக் குழுவுக்கும், இலங்கை அரச அதிகாரிகளுக்கும் இடையே சிறப்புக் கலந்துரையாடல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இனவாதம் மற்றும் மதவாதங்களை தூண்டும் வகையிலான மற்றும் வெறுப்புணர்வு கருத்துக்களை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு முகநூல் நிறுவனத்திடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அது தொடர்பான கலந்துரையடலுக்காகவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகநூல் மீதான தடை நீக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like