சுற்றுலாப் பயணிகளால் வைபர் தடை நீக்கம்!!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் தொடர்பாடலில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாகவே வைபர் மீதான தடை நேற்று நள்ளிரவுடன் நீக்கப்பட்டது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தியது.

சமூக வலைத்தளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையில் வைபர் தீதான தடை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் வட்ஸ் அப் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like