போத்தலில் அடைக்கப்பட்ட சிசுக்கள் மீட்பு!!

கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்தாத மருத்துவரின் வீடு ஒன்றில் நான்கு குழந்தைகளின் சடலங்கள் போத்தலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அந்த நாட்டுப் பொலிஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பழைய வீட்டை அண்மையில் ஒருவர் வாங்கி, வீட்டைப் புதுப்பிக்கும் பணிகளை வேலை ஆள்களை வைத்து ஆரம்பித்தால். அங்கு தரைப் பகுதியில் புதைக்கப்பட்ட நான்கு கண்ணாடிப் போத்தல்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அந்தப் போத்தல்களில் நான்கு சிசுக்களின் சடலங்கள் தொப்புள் கொடியுடன் இருந்தது. மேலும் வேதிப்பொருள் பயன்படுத்தி அந்தச் சிசுக்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வேலை ஆள்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் இதை செய்தது யார்?, அந்தச் சிசுக்கள் யாருடையது?, எதற்காக இவ்வாறு செய்துள்ளனர்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஜப்பான் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like