ரவூப் ஹக்கிம் மற்றும் ஹாலித் கௌதாவிடையே சினேகபூர்வ சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் மற்றும் கட்டார் அறக்கட்டளை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹாலித் கௌதா ஆகியோருக்கிடையே சினேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உப தலைவருமான எம்.எச்.எம். சல்மான், குநுநுனுநிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு தொடர்பாடலுக்கான பணிப்பாளர் அஷ்ஷேய்க் அம்ஜத் அஸ்ஹரியும் கலந்து கொண்டனர்.

You might also like