மரங்­க­ளைக் கடத்­தி­ய­வ­ருக்கு ஒரு­வ­ருடம் சிறை!!

வீட்­டுப் பொருள்­க­ளு­டன் மரங்­களை மறைத்­துக் கடத்­தி­ய­வர் பொலி­ஸா­ரி­டம் மாட்­டி­யி­ருந்­தார். அவ­ருக்கு 2 இலட்­சம் ரூபா தண்­டம் விதித்த நீதி­மன்று, ஒரு வருட சிறைத்­தண் டனை அனு­ப­விக்­க­வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்­டது.

பூந­க­ரிப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளிக்­கு­டா­வில் சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார். பளை­யைச் சேர்ந்­த­வரே சுமார் 2 மாதங்­க­ளுக்கு முன்­னர் இந்­தக் குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­டார்.

அவர் முதிரை மரக் குற்­றி­கள் 36 ஐத் துண்­டாடி லொறி­யில் ஏற்றி அதன் மேல் வீட்­டுக்­குள் பயன்­ப­டுத்­தப்­ப­டும் கதிரை, மேசை உள்­ளிட்ட பொருள்­களை ஏற்­றிச் சென்­றுள்­ளார். பள்­ளிக்­கு­டா­வில் பொலி­ஸார் நின்­றுள்­ள­னர். வாக­னத்தை மறித்து விசா­ரித்­த­போது லொறி­யில் உள்­ள­தெல்­லாம் வீட்­டுப் பொருள்­களே என்று கூறி­யுள்­ளார்.

எனி­னும் பொலி­ஸார் சந்­தே­கத்­தில் லொறிக்­குள் ஏறிப் சோதித்­த­போது வீட்­டுப் பொருள்­க­ளுக்கு அடி­யில் முதிரை மரக்­குற்­றி­கள் காணப்­பட்­டன. லொறிச் சாரதி கைது செய்­யப்­பட்­டார். வாக­ன­மும் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

சந்­தே­க­ந­பர் கிளி­நொச்சி நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். விசா­ர­ணை­யில் குற்­ற­வாளி என்­பது உறுதி செய்­யப்­பட்­டது. அத­னை­ய­டுத்து அவ­ருக்கு ஒரு வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி 2 இலட்­சம் ரூபா தண்­டம் செலுத்த வேண்­டும் என்­றும் நீதி­வான் ஏ.ஏ.ஆனந்­த­ராஜா உத்­த­ர­விட்­டார்.

அவர் கடத்­திய முதிரை மரக்­குற்­றி­க­ளின் பெறு­மதி 4 லட்­சத்து 85 ஆயி­ரம் ரூபா என்று மதிப்­பி­டப்­பட்­டது. அவை நீதி­மன்­றி­னால் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன என்று பூந­க­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like