வடக்குப் பாட­சா­லை­க­ளுக்கு போதி­ய­ளவு ஆசி­ரி­யர்­கள் தேவை!!

வடக்­கில் சில பாட­சா­லை­க­ளில் மாண­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக ஆசி­ரி­யர்­கள் சேவை­யில் உள்­ள­னர். இதே­வேளை ஆசி­ரி­யர் இன்றி அதி­ப­ரு­டன் மாத்­தி­ரம் இயங்­கு­கின்ற பாட­சா­லை­க­ளும் இங்கு உள்­ளன. எனவே தேவைப்­பாடு உள்ள பாட­சா­லை­க­ளுக்கு தேவை­யான ஆசி­ரி­யர்­களை சேவை­யில் அமர்த்தி மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யினை ஊக்­கு­விக்க வேண்­டும் என கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

வலி­கா­மம் வடக்கு பிர­தேச ஒருங்­கி­ணைப்பு குழுக்­கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது.அதில் இந்­தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது. இது தவிர பல்வேறு துறைகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.

மீள்­கு­டி­யேற்­றப்­பட பிர­தே­சங்­க­ளில் பாட­சா­லை­கள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். விடு­விக்­கப்­ப­டட பாட­சா­லை­களில் சில இயங்­காத நிலை­மை­க­ளில் கூட காணப்­ப­டு­கின்­றன. பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை பெரும் பிரச்­சி­னை­யாக உள்­ளது. மேலும் ஆசி­ரி­யர் மாண­வர்­க­ளுக்­கான தள­பாட வச­தி­கள், கணினி தொகு­தி­கள் என அனைத்­தும் சீர்­செய்­யப்­பட வேண்­டும்.

சுகா­தா­ரம்
வலி.வடக்­கில் முக்­கிய நிைல­ய­மாக உள்ள தெல்­லிப்­பளை ஆதார வைத்­தி­ய­சாலை தாதி­யர் உள்­ளிட்ட ஆளணி பற்­றாக்­கு­றை­யு­டன் இயங்­கு­கி­றது. இவ்­வா­றான நிலையை சீராக்க பயிற்சி நிலை­யங்­கள் உரு­வாக்­கப்­பட்டு பயிற்சி அளிக்­கப்­ப­ட­வேண்­டும். மேலும் வைத்­தி­ய­சா­லையை அண்­டிய பிர­தே­சங்­க­ளில் கான்­கள் சீராக்­கப்­ப­ட­வேண்­டும். அவற்­றின் மூலம் டெங்கு நோய் பர­வு­வ­தற்கு வாய்ப்­பு­கள் அதி­கம் உள்­ளன.

தேங்­கு­கின்ற திண்­மக்­க­ழி­வு­கள் சீராக அகற்­றப்­ப­ட­வேண்­டும். திண்­மக்­க­ழி­வு­களை அகற்ற கீரி­மலை பிர­தே­சம் தெரிவு செய்­யப்­பட்ட போதும் மக்­கள் அதி­கம் குடி­யேற்­றப்­பட்­டத்­தால் அங்கு கழி­வு­கள் கொட்­டப்­ப­டு­வது தடை­செய்­யப்­பட்­டது. பின்­னர் அதுக்கு உரிய இடம் இனம்­கா­ணப்­பட்­ட­போ­தும் அதனை வேறு தேவைக்­காக பயன்­ப­டுத்துகின்றனர். எனவே உரிய இடம் பெற்­று­க்கொ­டுக்­கப்­ப­ட­வேண்­டும்.

மீள்­கு­டி­யேற்­றம்
வீட்­டுத்­திட்­டங்­கள் கொடுக்­கப்­பட்­ட­போ­தும் பலர் குடி­யே­ற­வில்லை. வீடு­திட்­டத்­துக்­கென ஒதுக்­கப்­ப­டும் நிதி போதாது காணப்­ப­டு­கி­றது. திருத்­தங்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­டும் பண­மும் போதா­துள்­ளது. மீள்­கு­டி­யேற்­றப்­பட பிர­தே­சங்­க­ளுக்கு குடி­நீர் வசதி, வீதி­கள் சீர­மைப்பு, சமுர்த்தி பய­னா­ளி­க­ளுக்கு உரிய கொடுப்­ப­ன­வு­கள், டெங்கு கட்­டுப்­பா­டு­கள், முக்­கி­ய­மாக வீடு­களை கட்­டு­வ­தற்­கு­றிய மணல் பெற்­றுக்­கொள்­வது போன்ற விட­யங்­கள் கவ­னத்­தில் கொள்­ளப்­ப­ட்டன.

வீதி அபி­வி­ருத்தி
வலி.வடக்கு பிர­தே­சத்தை பொறுத்­த­வ­ரை­யில் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டா­ம­லும், அபி­வி­ருத்தி வேலை­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு இடை­நி­றுத்­தப்­பட்­டும் காணப்­ப­டு­கின்­றன. அண்­மை­யில் வீதி அபி­ருத்­திக்­கென மத்­திய அர­சில் 330 மில்­லி­யன் டொலர்­கள் ஒதுக்­கப்­பட்­டுள்ள போதி­லும் அவை எந்த பிர­தே­சங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்ற தீர்­மா­னம் எடுக்­கப்­ப­டா­மை­யால் அவை பிரித்­தெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இந்த வரு­டத்­துக்­குள் பல வீதி­கள் புன­ர­மைக்­கப்­ப­டும். மேலும் பிர­தேச சபை மூலம் 101.965 கிலோ­மீற்­றர் வீதி­கள் இன்­னும் புன­ர­மைக்க பட இருக்­கின்­றன என தெரி­விக்­கப்­பட்­டது.

போக்­கு­வ­ரத்து
வலி.வடக்­கில் ஈடு­ப­டுத்­தப்­ப­டும் அரச­ போக்­கு­வ­ரத்து பேருந்­து­களை உரிய வகை­யில் செயற்­ப­டுத்த போதி­ய­ளவு ஆளணி பற்­றாக்­குறை நில­வு­வ­தாக குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பாட­சாலை சேவை­க­ளில் ஈடு­ப­டும் பேருந்­து­கள் மிகுந்த சிர­மத்­தின் மத்­தி­யி­லேயே தமது சேவை­யினை ஆற்­று­கின்­றன. பேருந்­து­கள் சாரதி மற்­றும் காப்­பா­ளர்­கள் மேலதிகமாக சேவை­யில் அமர்த்­தப்­ப­டும் பட்­சத்­தில் அவை­யும் இயங்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

வலி.வடக்­கில் இயங்­கு­கின்ற முச்­சக்­கர வண்டி சங்­கங்­கள் சட்­ட­திட்­டத்­துக்கு அமைய இயங்­கு­வ­தில்லை என குற்­றம் சுமத்­தப்­பட்டன. எனவே வலிகா­மம் வடக்கு முச்­சக்­க­ர­வண்டி சங்­கம் ஒன்­றினை உரு­வாக்க வேண்­டும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

You might also like