சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த விரைவில் சட்ட வரைவு

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

நாட்டில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்ட வரைவு நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் சமூக வலைத்தளங்களின் மீதான தடை குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன எனத் தெரியவருகிறது.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான மோதல்களைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like