பாரவூர்தி-மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் உயிரிழப்பு

திருகோணமலை – கந்தளாய், போட்டாறுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முள்ளிப்பொத்தானை, அரபா நகரைச் சேர்ந்தவர்களான அப்துல் ரவூப் சுஜான் (வயது-28), நஹீர் முஹம்மட் (வயது-20) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை நகரிலிருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த பாரவூர்தியை பாலம் போட்டாறுக் கோவிலுக்கு முன்பாக நிறுத்திய அதன் சாரதி, அக்கோவிலுக்கு வழிபாட்டில் ஈடுபட்ட சென்றுள்ளார். அப்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பாரவூர்தியுடன் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களான நஹீர் முஹம்மட் என்பவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ள அதேவேளை, அப்துல் ரவூப் சுஜான் என்பவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like