அமிர்­த­லிங்­கத்­தின் உரு­வச் சிலை திறப்பு

முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் புதிய உரு­வச் சிலை இன்று வலி. மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­பட்டது.

சுழிபுரம் வலி.மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலையை எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திறந்து வைத்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You might also like