தற்கொலைகள் மற்றும் சட்டவிரோத செயலை தடுக்க சி.சி.டி.வி கமெராக்கள்

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெராக்களைப் பொறுத்துவதற்கான நடவடிக்கையை, புதிய மாநகர சபை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் கடமையாக செய்யவேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இந்தக் கோரிக்கையை ஊடகங்களுக்கு முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கிய இடமாகவும் கேந்திர நிலையமாகவும் கல்லடிப்பாலம் காணப்படுகின்ற நிலையிலும் மிகக் கூடுதலான தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான சம்பவங்களை அவதானிப்பதற்காகவும் அண்மைக்காலமாக கல்லடிப் பாலத்தடியில் தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதில் சிலர் தற்கொலையா அல்லது கொலையா என்று சந்தேகிக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை சி.சி.டி.வி கமெராக்களை பொறுத்துவதன் மூலம் தடுக்கமுடியும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் கடத்தப்படும் வாகனங்கள் அல்லது சட்ட விரோத செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்லடிப் பாலம் ஊடாகத்தான் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என்பதனால் அந்த செயற்பாடுகளையும் மிக இலகுவாக கண்டறியக் கூடிய நிலையை இதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்

You might also like