23 பேருக்கு வாழ்வாதார உதவிகள்!!

வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரும், யாழ் வணி­கர் கழக உப­த­லை­வ­ரு­மான இ.ஜெய­சே­க­ர­னால் 23 பேருக்கு வாழ்­வா­தார உத­வித் திட்­டங்­கள் வழங்­கும் நிகழ்வு அண்­மை­யில் யாழ் வணி­கர் கழக பணி­ம­னை­யில் தலை­வர் இ.ஜயக்­கு­மார் தலை­மை­யில் நடை­பெற்­றது.

ஜெய­சே­க­ரம் முன்­னர் உறு­தி­ய­ளித்­த­வாறு தனது வட­மா­காண சபை­யின் சம்­ப­ளப்­ப­ணத்தை ஒவ்­வொரு மாத­மும் வாழ்­வா­தார உத­வித் திட்­டங்­கள் மற்­றும் சமூக நலத்­திட்­டங்­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றார்.

இந்த நிலை­யில் கடந்த நான்கு மாதங்­க­ளாக உள்­ளு­ராட்சி தேர்­தல் கார­ண­மாக இந்த வாழ்­வா­தா­ரத்­திட்­டம் வழங்க முடி­யா­மை­யி­னால் 4 மாதங்­க­ளுக்­கு­ரிய வாழ்­வா­தா­ரத் திட்­டங் க­ளை­யும் சேர்த்து தற்­போது வழங்­கப்­பட்­டது.

யாழ்ப்­பாண பிர­தேச செய­ல­கப் பிரி­விற்­குட்­பட்ட வறு­மைக்­கோட்­டின் கீழ் வாழும் பெண்­க­ளைத் தலை­மைத்­து­வ­மா­கக் கொண்ட 18 பய­னா­ளி­க­ளுக்­கும், ஊர்­கா­வற்­றுறை பிர­தேச செய­ல­கப் பிரி­வுக்குட்­பட்ட 04 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கும் ,நோயி­னால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்­கும் சிறு­தொ­ழில் முயற்­சிக்­கா­க­வும் அவர்­க­ளின் கோரிக்­கைக்­க­மை­வாக சுமார் 3 இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான சமை­யற்­பாத்­தி­ரங்­க­ளும், நிதி­யு­த­வி­க­ளும் வழங்­கப்­பட்­டது.

அதில், 7 பேருக்கு 10 ஆயி­ரம் ரூபா­வும், 4 பேருக்கு 15 ஆயி­ரம் ரூபா­வும், இரு­வ­ருக்கு 20 ஆயி­ரம் ரூபா வீதம் 13 பேருக்­கும் ஒரு இலட்­சத்து 70 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான பொருள்­க­ளும் வழங்­கப்­பட்­டன.
மேலும் 10 பேருக்கு ஒரு இலட்­சத்து 45 ஆயி­ரத்து ஐந்­நூற்று 40 ரூபா பெறு­ம­தி­யான பொருள்களும், ஒரு­வ­ருக்கு ரூபா 15 ஆயி­ரத்து எண்­ணூறு பெறு­ம­தி­ யான துவிச்­சக்­கர வண்­டி­யும், 9 பேருக்கு சுமார் 12 ஆயிரம் பெறுமதி யான பாத்தி ரங்களும் வழங்கப்பட்ட தாக வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

You might also like