ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் த்ரிஷா!!

கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட கொலிவூட்டின் அனைத்து முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்து விட்ட நடிகை த்ரிஷா, அடுத்ததாக முதல்முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

காலா, 2.0 படங்களை அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். ‘காலா’ படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கலாம் என்றொரு தகவல் கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது.

15 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக இருந்து வருகிறார் த்ரிஷா. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்ட த்ரிஷாவுக்கு, ரஜினியுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பது தான் குறை. அந்தக் குறை, இந்தப் படத்தின் மூலம் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

You might also like