மூன்று மடங்கு பெரிய முட்டை!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில், வழக்கத்துக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன்று மடங்கு பெரிய முட்டையை கோழி ஒன் று போட்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் காய்ன்ஸ் எனும் இடத்தில், ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டை பண்ணை நடத்தி வருகிறார். இருதினங்களுக்கு முன்பு இவரது பண்ணையில் வியக்கதக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது அங்கிருக்கும் கோழி ஒன்று பெரிய முட்டை போட்டுள்ளது.

சாதாரண முட்டை 58 கிராம் எடை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன்று மடங்கு அதிகமாக 178 கிராம் எடையுடன் உள்ளது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்ணையின் உரிமையாளர், அந்த முட்டையை எடுத்து எல்லோரிடமும் காட்டியுள்ளார். பிறகு அந்த முட்டையைத் தனியாகவும், மற்ற சாதாரண முட்டைகளுடனும் வைத்து ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த பெரிய முட்டை விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு கோழி இவ்வளவு பெரிய முட்டையை போடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like