தீ விபத்தில் காய­ம­டைந்­த­வர் உயி­ரி­ழந்­தார்!!

தீயில் எரிந்த நிலை­யில் சிகிச்சை பெற்­று­வந்த மூதாட்டி சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சாவற்­கட்டு ஆனைக்­கோட்­டை­யைச் சேர்ந்த பொன்­னம்­ப­லம் சகுந்­தலா (வயது – 75) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

கடந்த 25 ஆம் திகதி தனது வீட்­டில் அடுப்­புக்கு தென்­னம் ஓலை வைத்து மண்­ணெண்ணெய் ஊற்­றித் தீ மூட்­டி­யுள்­ளார். மண்­ணெண்ணெய் ஓலை வழி­யாக வழிந்து அவ­ரது உடை­யில் பட்­டுள்­ளது. அவர் தீ மூட்­டி­ய­போது அவ­ருக்­கும் தீ பற்­றி­யுள்­ளது.

காயங்­க­ளு­டன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார். நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார். திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை நடத்­தி­னார். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

You might also like