உளுந்து அடை

உளுந்து அடை

தேவையானவை:

உளுந்து – கால் ட‌ம்ள‌ர்
அரிசி மா- 3 தேக்க‌ர‌ண்டி
ர‌வை-ஒரு மேசை க‌ர‌ண்டி
வெங்காய‌ம் -3
பச்சை மிளகாய்-1
கொத்தமல்லி தழை- சிறிதளவு
நெய் மற்றும் எண்ணெய்-தேவையான அளவு

 

செய்முறை:

உளுந்தை அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து கொள்ளவும்.

சிறிது த‌ண்ணீர் சேர்த்து விழுதாக‌ அரைத்து கொள்ள‌வும்.

அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மா மற்றும் ரவை சேர்த்து கலக்கி அதில் உப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாயை சேர்த்து அடை சுட தகுந்தவாறு தண்ணீர் சிறிது சேர்த்து கொள்ளவும்.

அவற்றை பின் பொரித்து கொள்ளவும்.

You might also like