சீனாவின் சொர்க்க அரண்மனை கடலில் விழுந்து நொருங்கியது!!

சீனாவின் ‘சொர்க்கத்தின் அரண்மனை’ என்று அழைக்கப்படும் டியான்காங்-1 விண்வெளி நிலையம், இன்று பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது

வானில் இருந்து கீழே விழும்போதே விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் ஏறக்குறைய எரிந்து சாம்பலாகிவிட்டன என்று கூறப்படுகிறது.

2023 ஆ-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி நிலையம் அமைக்கும் நோக்கில், அதற்கு முன்னோட்டமாக 2011- ஆம் ஆண்டு சீனா டியான்காங்-1 என்ற விண்வெளி மையத்தின் மாதிரியை அனுப்பியது.

இந்த விண்வெளி ஓடத்தின் மூலம் பல்வேறு ஆய்வுகளையும், தனது நிரந்தர விண்வெளி மையத்தை அமைக்கும் பணிகளையும் சீனா மேற்கொண்டு வந்தது. 34 அடி நீளம் கொண்ட இந்த விண்வெளி ஓடம், சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் முக்கியமானதாக இருந்தது.

இதற்கிடையே கடந்த 2016ஆ-ம் ஆண்டு டியான்காங் விண்வெளி நிலையம் சீனாவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்து்டன் தொடர்பை இழந்து விட்டது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த இந்த விண்கலம் மீண்டும் பூமியின் சுறுப்பாதைக்குள் நுழைய முயன்ற போது, பிரேசில் கடற்பகுதியில் உள்ள பசிபிக் கடலில் விழுந்தது.

சா போலா, ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களுக்கு அருகே இருக்கும் கடல்பகுதியில் இந்த விண்கலத்தின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன.

இந்த டியான்காங்-1 விண்கலம் கடந்த 2013- ஆம் ஆண்டு செயல் இழக்க வைக்கப்பட்டு, அழிக்கப்பட இருந்தது. ஆனால், இந்த விண்கலம் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டுக்குப் பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது என்று ஆராய்ச்ச்ியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like