ஆறாவது அறிவை ஆறப்போடாதீர்…!

உல­கில் உள்ள உயி­ரி­னங்­கள், அவற்­றின் புலன் உணர்­வு­க­ளுக்கு இசை­வான வகை­யில் அவற்­றின் அறிவை ஆறாக வகுத்­துள்­ளார் தொல்­காப்­பி­யர். ஓர­றி­வுள்ள உயிர் உட­லால் அறி­யக் கூடி­யது. ஈர­றி­வுள்ள உயிர் உட­லா­லும், வாயா­லும் அறி­யக்­கூ­டி­யது.

மூவ­றி­வுள்ள உயிர் உடல், வாய், மூக்­கால் அறி­யக்­கூ­டி­யது. நால­றிவு உயி­ரா­னது உடல், வாய், மூக்கு, கண் என்­ப­வற்­றால் அறி­யக் கூடி­யது. ஐந்­த­றிவு உயி­ரா­னது உடல், வாய், மூக்கு, கண், காது என்­ப­வற்­றால் அறி­யக்­கூ­டி­யது.

இவை­க­ளோடு மன­தாலே அறி­யக்­கூ­டி­யதே ஆற­றிவு எனப்­ப­டும் என்­கி­றார். மனம் என்­பதை அவர் ஆறா­வது அறி­வா­கக் குயிப்­பி­டு­கி­றார். நாம் அதைப் பகுத்­த­றிவு என்­கி­றோம். ஐம்­பு­லன்­க­ளை­யும் ஆளும் மனம் ஆறா­வது அறிவு.

இதை உடை­ய­வர் மனி­தர். ஆறா­வது அறிவை அனைத்து மனி­தர்­க­ளும் அறி­வ­தில்லை என­வும், விலங்கை ஒத்த மனி­தர் ஐந்து அறி­வி­னர் என­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

பகுத்­த­றி­வும் மனி­தர்­க­ளும்

மனித வாழ்க்­கை­யில் அறிவு என்­பது தனித்­து­வ­மா­னது. அதைப் பெற்­றி­ருத்­தல் என்­பது ஆத்­மார்த்­த­மான பகுத்­த­றி­வின் மேன்­மைத்­து­வம். பகுத்­த­றி­வென்­பது, ஒவ்­வொரு விட­யத்­தை­யும் சீர்­தூக்கி வெளிச்­சார்­பு­டன் கற்று அதற்­கேற்­ப­தாய் நம்­பிக்கை நிகழ்­த­க­வு­களை அமைப்­பதே ஆகும்.

பகுத்­த­றி­வென்­பது மூளை­யின் அறி­வுப்­ப­கு­தியை மட்­டுமே ஏற்­ப­தில்லை. எம் உணர்ச்­சிப்­ப­கு­தி­யை­யும் ஏற்று நடப்­ப­தா­கும். மனி­தன் உயர்­நி­லைப் பகுத்­த­றி­வுள்ள விலங்கு. தான் புரி­யும் ஒவ்­வொரு செய­லுக்­கும் தனது சமூ­கம் சார்ந்த பெறு­மா­னங்­களை அறிந்­தும் புரிந்­தும் வைத்­தி­ருக்­கக் கூடி­ய­வன்.

பகுத்­த­றி­வு­டை­ய­வன் வேறொன்­றும் இல்­லா­தி­ருப்­பி­னும் எல்­லாம் உடை­ய­வ­னா­கின்­றான். பகுத்­த­றி­வைப் பயன்­ப­டுத்­தா­த­வன் வேறு செல்­வங்­களை உடை­ய­வ­ராக இருப்­பி­னும் ஒன்­றும் இல்­லா­த­வ­ரா­கவே கரு­தப்­ப­டு­கின்­றான். தடம் பார்த்து நடப்­ப­வன் அல்ல மனி­தன். பகுத்­த­றி­வைப் பயன்­ப­டுத்தி நடப்­ப­வனே உண்­மை­யான மனி­தன்.

மனித மூளை­யின் செயற்­பாட்­டின் பல நுணுக்­கங்­களை தன் ஆய்­வில் கண்­ட­றிந்­த­வர் ஹாவர்ட். இவர் ஒவ்­வொரு மனி­த­னி­டத்­தி­லும் எட்­டு­வி­த­மான புத்­திக் கூர்­மை­கள் காணப்­ப­டு­வ­தா­க­வும், நப­ருக்கு நபர் இதன் சத­வீ­தம் மட்­டும் மாறு­ப­டும் என்­றார்.

எவ்­வா­றா­யி­னும் இப்­பன்­மு­கப் புத்­திக் கூர்மை ( Multiple Intelligence ) இருப்­பி­னும் அவர் பகுத்­த­றி­வைப் பயன்­ப­டுத்­த­வில்­லை­யா­யின் புத்­திக் கூர்­மை­யால் எவ்­வகை பய­னும் இல்லை. ‘’ மனி­தன் ஒரு சமூ­கப் பிராணி ‘’ என அரிஸ்­டோட்­டில் அன்றே கூறி­யுள்­ளார். அவன் தனித்து வாழ எது­வும் செய்து கொள்ள முடி­யாது.

எப்­போ­தும் அவன் சமூ­கம் சார்ந்தே வாழ முடி­யும். இதற்கு சமூக அறிவு தேவை. சமூக அறிவு என்­பது நாம் எவ்­வாறு பிற­ரின் உணர்­வு­களை நிர்­வா­கம் செய்­கி­றோம் என்­ப­தா­கும். பகுத்­த­றிவை நாம் சீரா­கப் பயன்­ப­டுத்­தா­வி­டில் சமூ­கம் சார்ந்து வாழ்­வ­தென்­பது கடி­ன­மா­கும். பகுத்­த­றிவு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வாழ்க்­கைக்கு ஓர் ஊன்­று­கோ­லா­கும்.

மனி­தர்­க­ளுக்கு மட்­டு­மு­டைய அறிவு

வாழ்க்­கைச் சக்­க­ரம் நேர்த்­தி­யாக, சிக்­க­லின்றி உருண்­டோட பகுத்­த­றிவு அவ­சி­யம். அது­தான் மன­துக்கு ஆசான். பகுத்­த­றிவு, நற்­கு­டிப்­பி­றப்பு, அடக்­கம், கல்வி, வீரம், மித­மான வார்த்தை, சக்­திக்கு தகுந்த தானம், செய்­நன்றி அறி­தல் எனும் எட்­டுக் குணங்­க­ளும் மனி­தனை மேன்­மை­யு­றச் செய்­யும்.

பகுத்­த­றிவு ஒரு சமூ­கத்தை மட்­டு­மன்றி முழு உல­கத்­தை­யுமே ஆளக்­கூ­டிய ஒன்­றா­கும்.சம­கால உல­கில் வெற்­றி­க­ர­மாக வாழ்க்கையை வளப்­ப­டுத்த பகுத்­த­றிவு அவ­சி­யம்.

அதை­விட அவ­சி­யம் அதனை ஆறப்­போ­டாது பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தா­கும். மனி­தன் தனது வாழ்வை உரிய விதி­மு­றை­க­ளுக்கு அமை­வா­க­வும், சுய ஒழுக்­கங்­க­ளு­ட­னும் வாழ்­வ­தற்கு இவ்­வ­றிவு தொழிற்­பட வேண்­டிய ஒன்­றா­கும்.

பகுத்­து­ண­ரும் ஆற்­ற­லும் அறி­வும் கொண்ட மக்­கள் நீண்ட காலம் வாழ்ந்து வழி­காட்ட வேண்­டி­ய­வர்­கள். விலங்­கு­க­ளுக்­கும் பிற உயிர்­க­ளுக்­கும் பகுத்­து­ண­ரும் அறி­வில்லை. அத்­த­கைய அறிவு ஆண்­ட­வ­னால் மனி­தர்க்கு மட்­டுமே உள்­ளது.

உட­லைப் பாழாக்­கா­மல் வாழ்­வது சிறந்­தது

தாய் தந்­தை­ய­ரால் அமைத்­துக் கொடுக்­கப்­பட்ட அழ­கிய உட­லா­கிய இல்­லத்­தைப் பழு­த­டை­யாது பாது­காத்து வந்­தால் அந்த மனை நீண்ட ஆயு­ளைப் பெற்று நிலைத்­தி­ருக்­கும்.

உயிர் குடி­யி­ருக்­கும் வீட்­டைப் பாழாக்­கி­விட்டு மனம் வருந்­திக்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு பகுத்­து­ண­ரும் அறிவு இருந்து என்ன பயன்? ‘’ நெஞ்சு பொறுக்­கி­தில்­லையே இந்த நிலை­கெட்ட மனி­தரை நினைத்­து­விட்­டால் ‘’ என்ற பார­தி­யின் வாக்கு இவர்­க­ளுக்­கா­கத்­தானோ என்று நினைக்­கத் தோன்­று­கின்­றது.

எல்­லாப் பிற­வி­யி­லும் உயர்ந்த பிறவி மானி­டப் பிறவி. ஏனெ­னில் ஆறாம் அறி­வா­கிய பகுத்­த­றி­வு­டன் உணர்­வு­க­ளைப் பரி­மா­று­வ­தற்கு ஏற்ப படைக்­க­பட்­டி­ருக்­கிற பிறவி மனி­தப் பிறவி மட்­டும் தான்.

எந்­த­வொரு விட­யத்­தை­யும், காரி­யத்­தை­யும் செய்­யு­முன் சிந்­தித்து, சரி எது? பிழை எது? என ஆராய்ந்து மேற்­கொள்­வ­தற்­கா­கவே பகுத்­த­றி­வு­டன் படைக்­கப்­பட்­டுள்­ளான். எம்­மில் எத்­தனை பேர் இந்­தப் பகுத்­த­றி­வைப் பயன்­ப­டுத்­து­கி­றோம்? பயன்­ப­டுத்­தத் தவ­றி­ய­வர்­கள் தம்­மைத்­தாமே வெறுப்­ப­வர்­க­ளா­கக் காணப்­ப­டு­கின்­ற­னர்.

அது­மட்டு மல்­லா­மற் சமூ­கத்­தால், குடும்­பத்­தால், சட்­டத்­தா­லும் கூட அவர்­கள் வெறுக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். மூளை திரு­டப்­பட்­ட ­வர்­க­ளாக சமூ­கம் இவர்­க­ளைப் பார்க்­கின்­றது.

இது இவர்­க­ளுக்கு இன்­னும் தான் தெரி­ய­வில்­லையா? முறை­யான பகுத்­த­றி­வென்­பது இல்­லாது போகும்­போது மூளை எளி­தாக ஏமாந்து போகி­றது. நம்­பிக்கை நிகழ்­த­க­வு­ களை வெளிச்­சார்பு அறி­வுக்கு எதி­ராக அமைத்­து­வி­டு­கி­றது.

மரங்­க­ளுக்கு அறிவு உண்­டென உயி­ரி­ய­லா­ளர்­கள் தமது ஆய்­வின் மூலம் வெளி­யிட்­டுள்­ள­னர். மரத்­துக்கு ஓர­றிவு என்­கி­றோம். ஓர­றிவு மரத்­துக்கா? அல்­லது மரத்­துப்­போன மனி­தர்க்கா?

சீர­ழி­யா­மல் ஒன்­று­பட்டு வாழப் பழ­க­வேண்­டும்

பகுத்­த­றிவு வாழ்க்­கை­யின் ஒரு வள­மான வழி­காட்டி. வாழ்க்­கை­யின் உன்­னத நிலைக்கு உயர்த்­திப் பெய­ரும் புக­ழும் நிலைக்­கச் செய்து வள­மாக வாழ­வைக்­கும் வலிமை பெற்­றது. அனு­ப­வித்­துப் பார்த்­தால்­தான் புரி­யும்.

பகுத்­த­றிவு இப்­ப­டி­யெல்­லாம் செய்­யுமா? என்று சமூ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு மனி­த­ரும் தனித்­து­வ­மான சிந்­தனை நடத்­தை­கள், செயல்­க­ளைக் கொண்­ட­வர்­கள். இவர்­க­ளைப் புரிந்து, எந்­த­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி, கலாச்­சார சீர­ழி­வு­கள் அற்­ற­தாக, ஒன்­று­பட்டு வாழ பகுத்­த­றிவு பயன்­பாட்­டில் இருக்க வேண்­டும்.

சமூக உறுப்­பி­ன­ராக நுழை­வ­தற்கு பகுத்­த­றிவு என்ற தகுதி இருத்­தல் அவ­சி­ய­மா­கும். பகுத்­த­றி­வைப் பயன்­ப­டுத்த மறுப்­ப­வர்­கள் அவர்­கள் வாழு­கின்ற சமூ­கம் விதித்த நிய­மங்­க­ளுக்கு ஏற்ப இயல்­பான மனி­த­ரா­கக் கரு­தப்­ப­ட­மாட்­டார்­கள்.

ஷேக்ஸ்­பி­யர் கூறி­யது போன்று ‘’ சிந்­திக்­கத் தெரி­யா­த­வன் முட்­டாள். சிந்­திக்க மறுப்­ப­வன் கோழை ‘’ ஆவான். பகுத்­த­றி­வைப் பயன்­ப­டுத்தி எவ்­வாறு வாழ வேண்­டும் என்­ப­தைக் கற்­றுக் கொண்டு வாழ வேண்­டும்.

இனி­யா­வது சிலர் திருந்­தட்­டும்

மனி­த­னுக்கு ஆறு அறிவு. இது போதா­தென்று ஏழா­வது அறி­வைப் பயன்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. இதுக்­குப் பிற­கா­வது சிலர் திருந்­து­கி­றார்­களோ என்று பார்ப்­போம். ஆழ்­ம­னதை பயன்­ப­டுத்­தும் முறையை கற்­றுக் கொள்­வ­து­டன் தேர்ச்­சி­யும் அடைந்­து­விட்­டால் ஏழா­வது அறி­வைப் பெறு­வ­தும் பயன்­ப­டுத்­து­வ­தும் எளிது.

ஏழா­வது அறிவு மூலம், பிரச்­சி­னை­களை எளி­தில் தீர்த்­துக் கொள்ள முடி­யும். ஏழா­வது அறி­வைப் பெற்­றுக் கொள்­ளும் வரை அன்­பினை ஆதா­ர­மா­கக் கொண்டு உணர்ச்­சியை விரட்டி பகுத்­த­றி­வுக்கு வேலை கொடுத்து வாழப் பழக வேண்­டும்.

இன்று நாம் வாழும் அவ­சர உல­குக்கு பகுத்­த­றி­வின் பயன்­பாடு என்­பது அவ­சி­ய­மான ஒன்­றா­கும்.

குறு­கிய நேரத்­தில் வேலை­க­ளைச் செய்து முடிக்க வேண்­டிய தேவைப்­பா­டும், குறித்த நேரத்­தில் முடி­வு­களை எடுக்க வேண்­டிய நிர்ப்­பந்­த­மும் உள்ள காலத்­தில் வாழும் நாம் பகுத்­த­றி­வைப் பயன்­ப­டுத்­தாது விட­மு­டி­யாது.

பகுத்­த­றி­வில்­லாது செய்­யப்­ப­டும் எந்­தச் செய­லா­லும் பாத­க­மான விளை­வு­க­ளையே சந்­திக்க நேரி­டும்.

You might also like