பங்குச்சந்தை எனும் பயனுறுதி

பங்­குச்­சந்தை முத­லீ­டு­களை முயற்­சி­யாண்­மை­யின் பிரதி விம்­ப­மா­க­வும்,மறு­வ­டி­வ­மா­க­வும் நோக்க முடி­யும்.அந்த­ வகை­யிலே பங்­குச்­சந்தை முத­லீடு என்­பது, வியா­பார முயற்­சி­யின் தன்மை, தொடர்­பு­டைய உற்­பத்­திப் பொருள்­கள் மற்­றும் சேவை­கள், சந்­தைச்­சூ­ழல், வாடிக்­கை­யா­ளர்­கள் மற்­றும் நிறு­வ­னத்­தின் முகா­மைத்­து­வம் சார்ந்து முத­லீட்­டுத் தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு முன்­பாக மேற்­கு­றிப்­பிட்ட செயல் வெளி­கள் குறித்து முழு­மை­யான பகுப்­பாய்வை மேற்­கொள்­வ­தோடு தொடர்­பு­ப­டு­கி­றது.

முயற்­சி­யாண்­மை­யும் தொழில் முனை­வும்

அதே போன்று முயற்­சி­யா­ளன் தன்­னி­ட­முள்ள வியா­பா­ரத் திட்­டத்­துக்கு செயல்­வ­டி­வத்­தைக் கொடுக்­கின்­ற­போது, அந்­தத்­திட்­டத்­து­டன் இணைந்த வியா­பா­ரச் செயற்­பா­டு­க­ளைப் பகுப்­பாய்வு செய்ய வேண்­டும்.

பங்­கு­மு­த­லீட்­டுக்­கும், முயற்­சி­யாண்­மைக்­கும் உள்ள மிகப் பெரிய வேறு­பா­டாக சில விட­யங்­களை நோக்க முடி­யும்.

பங்­கு­மு­த­லீட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில்,எமக்­காக யாரோ ஒரு சில முன்­னோ­டி­கள் வியா­பார முயற்­சிக்­குத் தேவை­யான அடிப்­ப­டை­களை நிறைவு செய்­துள்ள தன்­மை­களை உண­ர­மு­டி­கி­றது.

நிறு­வ­னத்­தின் வியா­பா­ரத்தை முழு­மை­யாக புரிந்­து­கொள்­வ­து­டன், நான் கொண்­டுள்ள ஒத்த சிந்­த­னை­யு­டன் நிறு­வ­னம் வழி­ந­டத்­திச் செல்­லப்­ப­டு­வதை அவ­தா­னிப்­பின் சந்­தே­க­மின்றி அந்­தக் கம்­ப­னி­யின் பங்­கு­களை கொள்­வ­னவு செய்து செய­லு­று­தி­யோடு வியா­பார முயற்­சி­யில் எம்மை இயக்­கு­ந­ராக மாற்­றிக் கொள்ள முடி­யும்.

திட்­ட­மி­டல்

தவிர, நாம் பங்­குச்­சந்தை முத­லீட்டை முயற்­சி­யாண்­மை­யின் ஓர் அங்­க­மாக நோக்­கு­கின்ற ஒரே­யோரு சந்­தர்ப்­பத்­தில் மாத்­தி­ரமே, பங்­குச்­சந்தை முத­லீட்டை முயற்­சி­யாண்­மை­யு­டன் ஒப்­பிட்டு நோக்க முடி­யும்.மாறாக, பரி­மாற்­றல் கரு­வி­யாக (Trading Instruments) நோக்­கு­மி­டத்து அதன் பெறு­மதி அல்­லது விலை­கள் காலத்­து­டன் இணைந்­த­தாக மாறிக்­கொண்­டி­ருப்­ப­தைத் தவிர்க்க முடி­யாது.

அடுத்த விலை அசைவை எதிர்­பார்த்து மீள் விற்­ப­னையை நோக்­கா­கக் கொண்டு பங்­கு­க­ளைக் கொள்­வ­னவு செய்­தல் ஓர் முத­லீட்டு (Investing) முயற்­சி­யல்ல என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். அது பங்கு­ வியா­பா­ர­மாக (Trading) அமைந்து விடு­வ­தைத் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

பெறு­பேற்­றின் அடைவு

இங்கு ‘ஆதிக்க வர்க்­கம்’, (Majority shareholder) வியா­பா­ரத்­தின் அடிப்­ப­டைப் பெறு­பேற்று அடை­வு­க­ளைக் கருத்­தில் கொள்­ளாது தாம் கொண்­டுள்ள திற­மை­யைப் பயன்­ப­டுத்தி ஊக வியா­பா­ரத்­தினை (betting or gambling) மேற்­கொள்­கின்­ற­னர்.

இது முத­லீடு அல்­லா­மல், பரி­மாற்­றல் வியா­பார­ மாக மட்­டுமே அமைந்­து­வி­டு­கி­றது.

முயற்­சி­யாண்­மை­யின் ஓர் அங்­க­மாக பங்­கு­மு­த­லீடு அமை­யப்­பெ­றும் தன்­மையை நோக்­கின்,அங்கு கீழ்­வ­ரும் முதன்­மைச் சிறப்­பி­யல்­பு­க­ளைக் கண்­டு­கொள்ள முடி­யும்.

தொழில்­மு­னைவு தொடர்­பான புரிந்­து­ணர்வு

பங்­கு­க­ளில் முத­லீடு செய்ய முன்­வ­ரு­கின்­ற­போது, நிறு­வ­னத்­தின் வியா­பா­ர­மு­யற்சி தொடர்­பில் தெளி­வான புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.அத­னையே பங்­குச்­சந்தை அறி­வு­றுத்தி நிற்­கி­றது.

குறிப்­பாக நிறு­வ­னம் எவ்­வா­றான பொருள் அல்­லது சேவையை உற்­பத்தி செய்­கி­றது? அவை எங்கே,எவ்­வாறு உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன? எவ்­வ­கை­யான மூலப்­பொ­ருள்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன?

மற்­றும் எவ்­வா­றா­ன­வர்­கள் அதன் வழங்­கு­ந­ராக உள்­ள­னர்?, போட்­டி­யா­ளர்­க­ளின் போட்­டித்­தன்மை எவ்­வா­றா­னது? என்­ப­வற்­றோடு நிதிக்­கி­டைப்­ப­னவு மற்­றும் நிதிக் கையா­ளுகை தொடர்­பில் அறிந்­தி­ருத்­தல் வேண்­டும்.

இதே போன்ற ஒர் பகுப்­பாய்வை முயற்­சி­யா­ளன் வியா­பார முயற்­சி­யாண்மை தொடர்­பில் வளங்­களை இணைக்­கின்ற போது மிக­வும் அவ­தா­ன­மாக ஆய்வு செய்ய வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கி­றது.

மாறாக அடிப்­படை வியா­பா­ரத் தந்­தி­ரோ­பா­யங்­க­ளைக் கருத்­தில் கொள்­ளாது பங்­குச்­சந்­தை­யில் முத­லி­டு­தல் என்­பது, வர்­ணப்­பூச்­சைத் திட்­ட­மி­டல் இன்­றிக் கைபோன போக்­கில் பூசு­வ­தற்கு ஒப்­பான செயல் நட­வ­டிக்­கை­யாக அமைந்­து­வி­டும்.

முத­லீட்­டுத் திரும்­ப­லும் அடிப்­படை வியா­பா­ரத்­தின் அடை­வும்

பங்­கு­மு­த­லீடு மற்­றும் முயற்­சி­யாண்மை என இரண்­டுமே அடிப்­ப­டை­யில் இடர்­நேர்­வு­டன் (Risk) இரண்­ட­றக் கலந்­தவை. வியா­பா­ரத்­தின் வெற்றி மற்­றும் தோல்­வி­யு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­ப­டு­கி­றது. அதனை வேறு­ப­டுத்த முடி­யாது.

மாறாக இழி­வு­ப­டுத்த முடி­யும். தெரிவு செய்­யும் நிறு­வ­னத்­தின் வியா­பா­ரப் பெறு­பே­றா­னது சிறப்­பாக அமை­யு­மி­டத்து, நிறு­வ­னம் தனது வியா­பா­ரத்தை விருத்தி செய்­வ­து­டன் உழைக்­கப்­பட்ட இலா­பத்­தைப் பங்­கு­லா­ப­மாக (Dividend) அதன் உரி­மை­யா­ளர்­க­ளு­டன் பகிர்ந்து கொள்­ளும்.

இது வரு­மான அதி­க­ரிப்­புக்­கான அடிப்­ப­டை­யாக அமை­கி­றது. முயற்சி­ யாண்­மை­யும் இதற்கு விதி­வி­லக்­கா­னது அல்ல.

அர்ப்­ப­ணிப்­பும் கடின முயற்­சி­யும்

இவ் இரண்டு முயற்­சி­க­ளும் கடின உழைப்­பு­டன் தொடர்­பு­டை­யவை. முயற்­சி­யாண்­மை­யைப் பொறுத்­த­வ­ரை­யில், வியா­பா­ரத்­தைத் தொடர்ச்­சி­யா­கச் சரி­யான பாதை­யில் இட்­டுச்­செல்ல வேண்­டிய பக்­கு­வம் அவ­சி­ய­மா­கி­றது.

இதற்கு முயற்­சி­ யா­ளன் தொடர்ச்­சி­யாக உற்­பத்தி மட்­டம், விற்­ப னைப்­ பெ­று­பேறு, நிதி­நி­ல­மை­கள், தொழி­லா­ளர்­க­ளின் வினைத்­தி­றன் மற்­றும் செல­வுச்­சிக்­க­னம் போன்ற நிறு­வ­னத்­தின் ஆரோக்­கி­ய­மான செயல்­நி­லை­கள் குறித்து கவ­னம் செலுத்த வேண்­டும்.

அவ்­வாறே பங்­கு­மு­த­லீட்­டி­லும் இவ்­வா­றான குறி­காட்­டி­களை நிறு­வ­னங்­க­ளின் காலண்டு மற்­றும் ஆண்டு அறிக்­கை­க­ளின் ஊடா­க­வும்,செய்­தித்­தாள் மற்­றும் விசேட ஆய்­வுக் குறிப்­பு­க­ளின் உத­வி­யோ­டும் அறிந்­து­கொள்ள முடி­கி­றது.

எமது முத­லீட்­டுத் தேக்­கத்­தில் (Portfolio) அவ்­வா­றான நிறு­வ­னங்­களை இனங்­கண்டு நிரல்­ப­டுத்த அதி­க­ள­வாக நேரம் மற்­றும் முயற்சி அவ­சி­யம் என்­பதை பங்­கு­மு­த­லீடு உணர்த்தி­ நிற்­கி­றது. பொது­வாக பல நிறு­வ­னங்­களை பின்­தொ­டர்­வ­ தைத் தவிர்த்து, சிந்­த­னை­பூர்­வ­மாக வச­திக்கு ஏற்­றாற் போல் குறித்த ஒரு சில நிறு­வ­னங்­க­ளைத் தெரி­வு­செய்­தல் நன்று.

வியா­பா­ரத்­தின் தெரிவு

எமது தெரிவு பிழை­யாக அமை­யு­மி­டத்து ஈடு­ப­டுத்­திய மூல­த­னத்தை மட்­டு­மல்ல,சிறந்த முத­லீட்டு வாய்ப்­பை­யும் இழக்க நேரி­டும். இது பங்­கு­மு­த­லீட்­டுக்கு மட்­டு­மல்ல முயற்­சி­யாண்­மைக்­கும் சாலப்­பொ­ருந்­தும்.

முயற்­சி­யா­ளன் தனது எண்ண வெளிப்­பாட்­டைச் (idea) சரி­யான நேரத்­தில் உரி­ய­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தத் தவ­றி­னால் இழப்பு என்­பது தவிர்க்க முடி­யாத அங்­க­மாக அமைந்­து­வி­டும்.

முகா­மை­யா­ளர் தெரிவு மற்­றும் தகைமை

முயற்­சி­யாண்­மை­யின் தொடர்ச்­சி­யான வெற்றி என்­பது, முயற்­சி­யா­ள­னில் மட்­டு­மன்றி அவ­னால் பணிக்­கப்­ப­டும் தொழில் நிபு­ணத்­து­வக் குழு­வி­லும் (Management) தங்­கி­யுள்­ளது.

அதா­வது, காலத்­துக்கு ஏற்ப புதிய திட்­டங்­களை அல்­லது யோச­னை­களை இணைத்து வியா­பார விரி­வாக்­கத்­துக்கு அடித்­த­ள­மாக முயற்­சி­யின் முகா­மை­யும், அதன்­த­ரா­த­ர­மும் அமை­கின்­றன.

அவ்­வா­றான பங்­கு­மு­த­லீட்டை ஆரம்­பிக்­கும் போது நாம் தெரிவு செய்­யும் நிறு­வ­னத்­தின் முகா­மை­யா­ளர்­கள் மற்­றும் நல்­லாட்­சித் தத்­து­வம் (good corporate governance) தொடர்­பாக நிறு­வ­னம் கொண்­டுள்ள கொள்­கை­களை மிக நுணுக்­க­மாக அவ­தா­னித்­துக் கொள்ள வேண்­டும்.

ஆக, உங்­கள் முத­லீ­டு­களை அச்­ச­மின்றி இவ்­வா­றான நிறு­வ­னங்­க­ளில் தொடர்ச்­சி­யாக ஈடு­ப­டுத்­திக் கொள்ள முடி­யும்.

வெற்­றியே முயற்­சி­யின் உச்ச அடைவு

இந்த இரண்டு முயற்­சி­க­ளும் பல­ருக்­குச் செல்­வத்தை மட்­டு­மன்றி, மதிப்­பிட முடி­யாத புக­ழை­யும் ஈட்­டிக் கொடுத்த பல சந்­தர்ப்­பங்­களை பங்கு முத­லீட்­ட­டில் கண்­டு­கொண்­டுள்­ளோம்.

இதற்கு அவர்­க­ளின் வெற்­றியே வித்­தாக அமைந்­தி­ருந்­தது. இருந்­த­போ­தும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முயற்­சி­யாண்­மை­யும்,பங்­கு­மு­த­லீ­டு­க­ளும் தோல்­வி­க­ளைக் கண்­டுள்ள உண்­மை­யை­யும் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

எனவே முயற்­சி­யாண்மை மற்­றும் பங்கு முத­லீடு ஆகிய இரண்டு நிலை­க­ளை­யும் ஓர் இல­கு­வான முயற்­சி­யாக நாம் கொள்­ளக்­கூ­டாது.

You might also like