கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

திருகோணமலை – சம்பூர் கட்டைபரிச்சான் காட்டுப்பகுதியில் இயங்கிய வந்த கசிப்பு நிலையம் இன்று காலை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1 இலட்சத்து 17,750 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது என சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like