உள்நோக்கம் கொண்டது முன்னணியின் அறிவிப்பு!!

தேர்தல் முடிவுகள் வௌிவந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால், ஈபிடிபி என்ற பேச்சே எழுந்திருக்காது. மேலும் துரோகிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதைவிட ஆட்சியமைக்காமல் விடுவதே சிறப்பு எனக் கூறிவருகின்ற முன்னணி, கூட்டமைப்பும் ஈபிடிபியும் இணைந்து செயற்படுவதை ஒரு பிரச்சினைக்குரிய விவகாரமாக மாற்றப் பார்க்கின்றது.

தமிழ் மண்­ணில் சிங்­க­ளக் கட்­சி­கள் ஆட்­சி­ய­மைக்­கும் வகை­யில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி செயற்­ப­டா­தெ­னத் தெரி­வித்­துள்ள அந்­தக் கட்­சி­யின் தேசிய அமைப்­பா­ள­ரான வி. மணி­வண்­ணன், இங்கு ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தமிழ்க்­கட்­சி­க­ளுக்­குத் தாம் ஆத­ர­வ­ளிக்­கப்­போ­வ­தா­க­வும், தெரி­வித்­துள்­ளார். இந்த அறி­விப்­பைக் காலம் கடந்த ஒன்­றா­க­வும், உள்­நோக்­கம் கொண்ட ஒன்­றா­க­வும் கருத முடி­கின்­றது.

கூட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் அதிக ஆச­னங்­களை
கைப்­பற்­றி­யி­ருந்­தும் பெரும்­பான்­மை பலம் கிட்­ட­வில்லை

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்பு வடக்­குக் கிழக்­கில் உள்ள அநே­க­மான சபை­க­ளில் அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. ஆனால் புதிய உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடை­முறை கார­ண­மாக கூட்­ட­மைப்­பால் பெரும்­பான்­மைப் பலத்­தைப் பெற­மு­டி­ய­வில்லை. அதே போன்று சாவ­கச்­சேரி மற்­றும் பருத்­தித்­து­றை­யில் முன்­ன­ணிக்கு அதிக ஆச­னங்­கள் கிடைத்த போதி­லும், கூட்­ட­ணி­யில் ஆட்­சி­ய­மைக்க முடி­ய­வில்லை. இந்த நிலை­யில் கூட்­ட­மைப்­பும், முன்­னி­ணி­யும் இணைந்து செயற்­ப­டு­மென்ற நம்­பிக்கை மக்­க­ளி­டம் காணப்­பட்­டது.

ஆனால் ஈபி­டி­பி­யின் மறை­முக ஆத­ர­வு­டன் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைக்க வேண்­டிய நிலை­யொன்று உரு­வா­னது. இது கூட்­ட­மைப்­பின் கொள்­கைக்கு விரோ­த­மா­ன­தெ­னப் பல­ரா­லும் விமர்­சிக்­ கப்­பட்­டது.கூட்­ட­மைப்­பின் தீவிர ஆத­ர­வா­ளர்­க­ளும் இதனை விரும்­ப­வில்லை. அந்­தப் பக்­க­மி­ருந்­தும் எதிர்ப்­ப­லை­கள் கிளம்­பின. மாவை சேனாதிராசா உட்­பட கூட்­ட­மைப்­பின் முக்­கிய தலை­வர்­கள் ஈபி­டி­பி­யு­டன் தாம் கூட்­டுச் சேர­வில்­லை­யெ­னத் திரும்­பத் திரும்­பக் கூறு­ம­ள­வுக்கு நிலைமை அவர்­க­ளுக்­குச் சங்­க­ட­மா­ன­தாக அமைந்­து­விட்­டது.

தற்­போது முன்­ன­ணி­யின் புதிய அறி­விப்­பைக் காலம் கடந்த ஒன்­றா­கவே கருத முடி­கின்­றது. கூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­தில் முன்­னணி எப்­போ­துமே தயங்­கி­ய­தில்லை. சீ.வி. விக்­னேஸ்­வ­ர­னின் மறை­முக ஆசீர்­வா­த­மும் அதற்கு உண்டு என்­ப­தால், கூட்­ட­ மைப்பை எந்த வகை­யி­லா­வது வீழ்த்­தி­விட வேண்­டும் என்­பதே அதன் முக்­கிய குறிக்­கோ­ளா­கக் காணப்­பட்­டது.

ஆட்­சி­ய­மைப்­ப­தில் கூட்­ட­மைப்­பும், ஈபி­டி­பி­யும் ஒன்­று­பட்­டமை முன்­ன­ணிக்கு ஓர் அரிய வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் கூட ஈபி­டி­பி­யின் தயவை கூட்­ட­மைப்பு நாடி­யமை மிகப்­பெ­ரிய தவ­றென விமர்­ச­னம் செய்­தி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­ கது. இனி­மேல் மேடை­கள் தோறும் இந்த விவ­கா­ரமே முன்­னிலை வகிக்­கப் போகின்­றது.

இதே வேளை வவு­னியா வடக்கு மற்­றும் கர­வெட்­டிப் பிர­தேச சபை­க­ளில் கூட்­ட­மைப்பு ஆட்­சியை அமைப்­ப­தற்கு ஏது­வாக முன்­னணி ஆத­ரவு வழங்­கு­மெ­னத் தெரி­வித்­துள்­ளதை உள்­நோக்­கம் கொண்­ட­தெ­னவே கரு­த­மு­டி­கின்­றது.

தேர்­தல் முடி­வு­க­ளை­ய­டுத்து  மதில் மேல் பூனை­க­ளான தமிழ்க் கட்­சி­கள்

தேர்­தல் முடி­வு­கள் வௌிவந்­த­வு­டன் கூட்­ட­மைப்­பும், முன்­ன­ணி­யும் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தால் ஈபி­டிபி என்ற பேச்சே எழுந்­தி­ருக்­காது. மேலும் துரோ­கி­க­ளு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தை­விட ஆட்­சி­ய­மைக்­கா­மல் விடு­வதே சிறப்பு எனக் கூறி­வ­ரு­கின்ற முன்­னணி, கூட்­ட­மைப்­பும், ஈபி­டி­பி­யும் இணைந்து செயற்­படுவதை ஒரு பிரச்சினைக்குரிய விவ­கா­ர­மாக மாற்­றப் பார்க்­கின்­றது என்­பதை இப்­போதே எதிர்வு கூறி­விட முடி­யும்.

மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் மீண்­டும் போட்­டி­யி­டு­வ­தற்­கான சாத்­தி­யம் அதிக அள­வில் காணப்­ப­டு­கின்­றது. முன்­ன­ணி­யின் ஆத­ரவு அவ­ருக்கு நிச்­ச­ய­மா­கக் கிடைக்­கப் போகின்­றது. கூட்­ட­மைப்­பி ­லிருந்து விக்­னேஸ்­வ­ரன் விலகிநிற்­ப­தற்கு இது­வொரு பிர­தான கார­ண­மா­கும்.

தமி­ழ­ர­சுக் கட்­சியோ அல்­லது கூட்­ட­மைப்போ தம்மை ஆத­ரிக்­கப் போவ­தில்­லை­யென்­பதை நன்­கு­ணர்ந்து கொண்ட அவர், இப்­போதே கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளின் ஆத­ர­வைத் திரட்­டிக்­கொள்ள ஆரம்­பித்­து­விட்­டார். தமிழ் மக்­கள் பேர­வை­யைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளில் அவர் ஈடு­ப­டு­வ­தும், முன்­ன­ணி­யு­டன் நெருக்­க­மான மறை­முக ஆத­ர­வைப் பேணி­வ­ரு­வ­தும், அவ்­வப்­போது தமி­ழ­ர­சுக் கட்­சி­யை­யும், கூட்­ட­மைப்­பை­ யும் கண்­டித்து அறிக்கை வௌியி­டு­வ­தும் இதற்­கா­கத்­தான் என்­பதை சாதா­ரண மக்­கள் கூடப் புரிந்து கொள்­வார்­கள்.

தனது வாக்குவங்கி அதி­க­ரிப்பு குறித்து மகிழ்ச்­சி­ய­டைந்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கிடைத்த மக் கள் ஆத­ரவு, முன்­ன­ணிக்கு உற்­சா­கத்­தைக் கொடுத்­துள்­ளது. அதன் வாக்கு வங்­கி­யில் ஏற்­பட்ட அதி­க­ரிப்­புக் கண்டு முன்­ன­ணி­யின் தலை­வர்­கள் வியப்­ப­டைந்­துள்­ள­னர். கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மிகக் குறை­வான வாக்­கு­களே கிடைத்­த­தால் துவண்டு போயி­ருந்த முன்­ன­ணி­யி­ன­ருக்கு, உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் புது இரத்­தத்­தைப் பாய்ச்­சி­யுள்­ளது. கூட்­ட­மைப் பி­னர் அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்டபோதி­லும், தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யா­மல் திண­றி­யது கண்டு முன்­ன­ணித் தலை­வர்­கள் மகிழ்ச்­சி­யின் உச்­சிக்கே சென்­று­விட்­ட­னர்.

தற்­போது வவு­னியா வடக்­கி­லும், கர­வெட்­டி­யி­லும் ஆத­ரவு தெரி­விக்க அவர்­கள் முன்­வந்­துள்­ளமை ஓர் அர­சி­யல் நாட­கம் என்றே கூற வேண்­டும்.

கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள் ஆளுக்­கொரு அறிக்­கையை வௌியிட்­டுக் கொண்­டி­ருப்­பதை விடுத்து, உண்­மை­யான நிலையை மக்­க­ளுக்கு எடுத்­துக் கூற வேண்­டும். இல்­லை­ யேல் மக்­கள் கூட்­ட­மைப்­புத் தொடர்­பா­கத் தவ­றான எண்­ணத்­தையே கொண்­டி­ருப் பார்­கள். இதை­விட முன்­ன­ணி­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பா­க­வும் ஆழ்ந்து யோசித்து உரிய முடிவை கூட்­ட­மைப்பு। எட்­ட­வேண்­டும்.

You might also like