வறுத்தலைவிளான் கிராமத்தில் 30 வீடுகள் கையளிப்பு!!

நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கான காணியுடன் கூடிய வீடுகள், வலி.வடக்கு வறுத்தலைவிளான் கிராமத்தில் இன்று கையளிக்கப்பட்டன.

இதில் 30 பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சினால் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னையா சுரேஸ், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சி மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might also like