கிராமத்தில் கலக்கும் பிந்து மாதவி!!

தமிழ் சினிமாத்துறையில் தற்போது வேலைநிறுத்தம் நடந்து வருவதால், திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக நடிகர் விக்ரம் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கும், நடிகை நயன்தாரா நீண்ட நாள்களுக்குப் பிறகு, கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டிற்கும் சென்றிருந்தார்.

இந்த நிலையில் பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி தனது சொந்த ஊரான ஆந்திரப்பிரதேசத்திலுள்ள தேவரிந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் ஆடு மேய்ப்பது, மண்பானையில் சமைப்பது, கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் குல தெய்வ கோவில்களுக்கு நடந்து சென்று பிரார்த்தனை செய்வது போன்ற ஒளிப்படங்களை தன்னுடைய கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நகரத்திலிருந்து வந்து கிராமத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like