இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

இன்றைய பஞ்சாங்கம்

06-04-2018, பங்குனி 23, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.04 வரை பின்பு தேய்பிறை சப்தமி. கேட்டை நட்சத்திரம் பகல் 11.42 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 11.42 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 11.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமை தேவை. தொழில் செய்பவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் மதியத்திற்குப் பின் குறையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு பகல் 11.42 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுக்களில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொன்பொருள் சேரும். நினைத்தது நிறைவேறும்.

கடகம்

இன்று உங்கள் திறமைகளால் வளர்ச்சி அடையும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். எதிலும் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பணபுழக்கம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கலாம். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

You might also like