உதயநிதியின் அப்பாவாக கார்த்திக்!!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தில் நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பின்னர், அட்லீயின் உதவியாளர் ஈநாக் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். பிரியா பவானி சங்கர், இந்துஜா என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடிக்கின்றனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இதைத் தயாரிக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிந்த பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில், உதயநிதிக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கிறார். கார்த்திக் தற்போது தன் மகன் கெளதம் கார்த்திக்குக்கு அப்பாவாக ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார்.

You might also like