காலம் கடந்த பின்னர் சூரிய வணக்கம்

கடைசி­யில் ஆயுள் முடி­யப்­போ­கும் நேரத்­தில், வடக்கு மாகா­ணத்­தின் எல்­லை­யில் நடக்­கும் அக்­கி­ர­மங்­க­ளுக்­குக் குறைந்­தது அடை­யாள எதிர்ப்­பை­யா­வது காட்­டு­வ­தற்கு வடக்கு மாகாண சபை­த­யா­ராகி இருக்­கி­றது.

எதிர்­வ­ரும் 10ஆம் திகதி முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­திற்கு எதி­ரா­கக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் ஒன்றை நடத்­தப்­போ­வ­தாகச் சபை அறி­வித்­துள்­ளது. திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங் களை தடுக்க வலி­யு­றுத்­தியே இந்­தப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

வடக்கு மாகாண சபை அமைக்­கப்­பட்டு கிட்­டத்­தட்ட நான்­கரை வரு­டங்­கள் முடிந்­து­விட்­டன. எஞ்­சி­யி­ருப்­பது இன்­னும் 6 மாதங்­கள்­தான். மாகாண சபை பத­விக்கு வந்­த­போது கொழும்­பில் ஆட்­சி­யில் இருந்­த­வர் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

இவ­ரது காலத்­தில் எல்­லைப்­பு­றக் கிரா­மங்­க­ளி­லும், வடக்கு மாகாண சபை­யின் எல்­லைக்­குள்­ளும், திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அம்­பாந்­தோட்டை போன்ற மிகத் தொலை­தூ­ரக் கிரா­மங்­க­ளில் இருந்­தெல்­லாம் சிங்­கள மக்­கள் ஆசை வார்த்­தை­கள் கூறி அழைத்­து­வ­ரப்­பட்­டுக் குடி­யேற்­றப்­பட்­டார்­கள். இது தவிர பௌத்த மய­மாக்­க­லும் தீவி­ர­மாக நடந்­தது.

வடக்கு மாகாண சபை பத­வி­யேற்­ற­துமே தனது கையில் எடுத்­தி­ருக்க வேண்­டிய மிக முக்­கிய பிரச்­சி­னை­யாக இது இருந்­தது. ஆனால், சபை­யும் அதனை ஆட்­சி­செய்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரும் அது பற்றி அலட்­டிக்­கொள்­ள­வில்லை.

தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­து­டன் இந்­தப் பிரச்­சி­னை­யைக் கடந்து சென்­று­விட்­டார்­கள்.

அதன் பய­னாக, எல்­லை­யில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் வலு­வா­கக் காலூன்­றத் தொடங்­கி­விட்­டன. சிங்­கள அதி­கா­ரி­கள் குடி­யேற்­றப்­பட்ட சிங்­கள மக்­க­ளுக்­குச் சாத­கமாக நடந்­து­கொண்­டார்­கள்.

வடக்கு மாகாண ஆளு­ந­ராக இருந்­த­வ­ரான மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சி­றி­யும் ஆரம்­பத்­தில் குடி­யே­றி­க­ளுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்­டையே எடுத்­தார். தமிழ் அதி­கா­ரி­கள் இதில் தர்­ம­சங்­க­டத்­துக்­குள் மாட்­டிக்­கொண்­டார்­கள்.

தமது உய­ர­ தி­கா­ரி­கள் சொல்­வ­தைச் செய்து குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்­பதா, இல்­லை­யென்­றால் உண்­மை­யின் பக்­கம் நிற்­பதா என்­பதே அவர்­க­ளின் குழப்­பத்­திற்­குக் கார­ணம்.

இவர்­க­ளின் இந் தக் குழப்­பத்­தை­யும் தனக்­குச் சாத­கமா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட பெரும்­பான்­மை­யின அதி­கா­ரி­கள் , சிங்­க­ளக் குடி­யே­றி­க­ளுக்­குச் சாத­கமாக எல்­லா­வற்­றை­யும் நகர்த்த ஆரம்­பித்­தார்­கள்.

அத­னா­லேயே அர­சி­தழ் (வர்த்­த­மானி) மூலம் அறி­விக்­கப்­ப­டா­ம­லேயே வெலி­ஓயா (மண­லாறு) என்­றொரு பிர­தேச செய­ல­கம் சிங்­க­ள­வர்­க­ளுக்­காக இயங்­கு­கின்­றது. மக­ாவலி ‘எல்’ வல­யம் என்ற போர்­வை­யில் இந்­தப் பகு­தி­யில் மீண்­டும் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை வலுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளும் துரி­தப்­ப­டுத் தப்­பட்­டன.

இந்த நட­வ­டிக்­கை­க­ளால் தமிழ் மக்­க­ளின் உறு­தி­கள் கொண்ட காணி­கள் பல­வும்­கூட இப்­போது சிங்­க­ளக் குடி­யே­றி­க­ளின் வச­மா­கி­விட்­டன. அவற்றை மீட்க முடி­யாத நிலை­யில், தமிழ் அதி­கா­ரி­க­ளின் ஆத­ர­வும் இல்­லாத நிர்க்­க­தி­யாக நிலை­யில், அந்­தப் பகு­தித் தமிழ் மக்­கள் தவிக்­கின்­ற­னர்.

மகா­வலி அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் இந்­தப் பகு­தி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளும் 30 ஆண்­டு­கால ஆயு­தப் போராட்­டம் மூழு­வ­தற்­கான முக்­கிய கார­ணங்­க­ளில் ஒன்று.

விடு­த­லைப் புலி­க­ளின் தாக்­கு­தல்­க­ளால் தடைப்­பட்­டி­ருந்த இந்­தக் குடி­யேற்­றங்­கள், போர் முடிந்­த­தும் விட்ட இடத்­தில் இருந்து தொடர ஆரம்­பித்­து­விட்­டன. 30 ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய தமது திட்­டத்­தி­லி­ருந்து இம்­மி­ய­ள­வும் வில­கா­மல் அவர்­கள் இருந்­தார்­கள் என்­பதை அவர்­க­ளது நட­வ­டிக்­கை­கள் நிரூ­பித்­து­விட்­டன.

ஆனால், ஆயு­தப் போராட்­டத்­தின் தொடர்ச்­சி­யா­க­வும், தமிழ் மக்­க­ளின் சுதந்­திர வேட்­கை­யின் மறு­வ­டி­வ­மா­க­வும் முகிழ்த்த வடக்கு மாகா­ண­சபை அதற் கெ­தி­ரான போராட்­டத்­தைத் தொட­ர­வில்லை. அல்­லது மிக மிக கால­தா­ம­த­மா­கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இதனை, சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர்­களே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்­கள். இந்த விட­யத்­தில் மாகாண சபை­யி­னர் என்ன செய்­தார்­கள் என்­கிற கேள்­வியை அவர்­களே எழுப்­பி­யி­ருக்­கி­றார்­கள்.

அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் காணி அதி­கா­ரங்­கள் மாகாண சபைக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், அத­னைப் பயன்­ப­டுத்­தி­யா­வது மாகாண முத­ல­மைச்­சர் சிங்­க­ளக் குடி­யேற்ற விட­யத்­தில் எதை­யா­வது முயன்­றி­ருக்­க­ லாம்.

அது­வும் நடக்­க­வில்லை. காலம் கடந்த பின்­னர் சூரிய வணக்­கம் என்­ப­தைப் போல இந்த விட­யத்­தில் மாகாண சபை­யி­னர் எடுக்­கும் நட­வ­டிக்­கை­யால் என்ன பயன் கிட்­டப்­போ­கின் றது, அவர்­க­ளுக்­குக் கிடைக்­கப்­போ­கும் அர­சி­யல் லாபம் தவிர என்­பது கேள்­விக்­கு­ரி­யதே!

You might also like