வாக்­கு­று­தி­கள் எல்­லாம் எப்­போ­து­தான் நிறை­வே­றும்?

தனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­கள், ராஜாங்க அமைச்­சர்­கள், பிரதி சபா­நா­ய­கர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் கொண்­டு­வர இருந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை நிறுத்­து­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றார். இதன் மூலம் பதி­லுக்­குப் பதில், பழிக்­குப் பழி என்­கிற வகை­யி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

ரணில் இந்த முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்­ப­தாக, அத்­த­கை­ய­தொரு முடி­வுக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ரவு தெரி­விக்­கப்­போ­வ­தில்லை என்­பதை அவரே திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தார். ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்­த­மைக்­கா­கச் சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­க­ளைத் தான் பதவி நீக்­கு­வ­தாக இருந்­தால், தன்­னை­யும் சகட்டு மேனிக்க விமர்­சித்த ஐ.தே.க. அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்­க­வேண்டி  இருக்­குமே, அது பர­வா­யில்­லையா என்று கேட்டு ரணி­லி­ன­தும் அவ­ரது கட்­சி­யி­ன­ர­தும் வாயை அடைத்­து­விட்­டார் மைத்­திரி.

மொத்­தத்­தில் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்­கான பதி­லடி நட­வ­டிக்­கை­கள் இப்­போ­தைக்­குக் கிடப்­பில் போடப்­பட்­டா­லும் , ஐ.தே.கட்சி மற்­றும் சுதந்­தி­ரக் கட்சி என்­ப­வற்­றுக்கு இடை­யி­லான முறு­கல், முட்­டி­மோ­தல்­கள், அர­சி­யல் பிணக்­கு­கள் தொட­ரும் அறி­கு­றியே தெரி­கின்­றன. இவற்றுக்கு மத்­தி­யில் தனது கட்­சிக்­குள்­ளேயே தான் எதிர்­கொள்­ளும் சவால்­க­ளை­யும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமா­ளித்­தாக வேண்­டி­யி­ருக்­கி­றது.  கட்­சித் தலை­மையை அடுத்த தலை­மு­றை­யி­டம் கைய­ளிக்­க­வேண்­டிய ஆபத்­தை­யும் சமா­ளித்­தா­க­வேண்­டி­ருக்­கி­றது.

இத்­த­கைய களே­ப­ரங்­க­ளுக்கு இடை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குத் தான் வழங்­கிய 10 வாக்­கு­று­தி­க­ளைத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஞாப­கத்­தில் வைத்­தி­ருப்­பாரா என்­கிற சந்­தே­க­மும் எழா­மல் இல்லை.  நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்­னர் வந்த ஓரிரு நாள்­க­ளில் தமிழ்க் கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­கள் குறித்த எந்­த­வொரு வார்த்­தை­யை­யும் தலைமை அ மைச்­சர் வெளிப்­ப­டுத்­த­வில்லை. கூட்­ட­மைப்­புக்கு வழங்­கும் உறுதி மொழியை நாடா­ளு­மன்­றத்­தில் பகி­ரங்­க­மா­கத் தனது உரை­யில் உள்­ள­டக்­க­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை ரணில் நிரா­க­ரித்­தி­ருந்­தார்.

அப்­ப­டிச் செய்­வது சிங்­க­ள­வர்­க­ளைத் தூண்டி விடு­வது போன்று அமைந்­து­வி­டும் என்று அவர் கார­ணம் கூறி­யி­ருந்­தார். அவ­ரது கார­ணத்தை ஏற்­றுக்­கொள்­ளாத வகை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் காட்­டிக்­கொண்டு, நேர­டி­யாக இல்­லா­விட்­டா­லும் மறை­மு­க­மா­க­வே­னும் தலைமை அமைச்­ச­ரின் உரை­யில் அது இடம்­பெ­ற­வேண்­டும்  என்று வலி­யு­றுத்­தி­ய­தோடு விட்­டு­விட்­டது.

தனது பத­வி­யைக் காப்­பாற்­று­வ­தற்­குத் துணை­யி­ருக்­கப்­போ­கும் தமிழ் மக்­க­ளுக்கு பிர­தி­யு­ப­கா­ர­மா­கத் தான் என்ன செய்­யப்­போ­கி­றார் என்­ப­தைப் பகி­ரங்­க­மாக நாடா­ளு­மன்­றத்­தில் அறி­விப்­ப­தற்­குத் தயங்­கி­யமை,கூட்­ட­மைப்­புக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான காலக்­கெடு எது­வும் விதிக்­கப்­ப­ டாமை,  நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் தெற்­கின் அர­சி­யல் கள­நி­ல­வ­ரம் செல்­லும் போக்கு இவை­யெல்­லா­வற்­றை­யும் பார்க்­கும்­போது கூட்­ட­மைப்­புக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை எப்­போ­து­தான்  ரணில் நிறை­வேற்­று­ வார் என்­கிற கேள்வி தமி­ழர்­கள் மனங்­க­ளில் எழு­வ­தும் நியா­ய­மா­னதே.

வாக்­கு­றுதி வழங்­கிய ஓரிரு நாள்­க­ளுக்­குள்­ளேயே அதனை நிறை­வேற்­றி­வி­ட­வேண்­டுமா என்­கிற கேள்வி இங்கு எழு­வ­தும் நியா­ய­மா­னதே! ஆனால், தமிழ் மக்­கள் அப்­ப­டிச் சந்­தே­கப்­பட போதிய வர­லாறு கடந்த காலத்­தில் உள்­ள­தை­யும் மறக்­கக் கூ­டாது. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு இணை அனு­ச­ரணை வழங்­கிய தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தாக பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு வாக்­கு­றுதி வழங்­கி­விட்டு அத­னைச் செயற்­ப­டுத்­தா­த­வர்தானே ரணில்! அது­போன்றே இந்த வாக்­கு­று­தி­க­ளை­யும் அவர் நிறை­வேற்­று­வாரா இல்­லையா என்று தெரிந்­து­கொள்ள தமிழ் மக்­க­ளால் 2 வரு­டங்­கள் காத்­தி­ருக்க முடி­யாது. அதற்­குள் அவ­ரது பத­விக்­கா­லம் நித்­திய கண்­டம் பூரண ஆயுள் என்ற வகை­யில் முடிந்­து­வி­டும்.

என­வே­தான், இவ்­வ­ளவு அவ­ச­ரப்­ப­ட­வேண்­டி­யி­ருக்­கி­றது தமி­ழர் தரப்­பில். தெற்­கில் நில­வும் அர­சி­யல் குழப்ப நிலை­யைக் கார­ணம் காட்­டியே அடுத்து வரும் இரண்டு வருட காலத்­தை­யும் கடத்­தி­வி­டு­வார்­களோ என்­கிற அச்­சம்­தான் அதற்­குக் கார­ணம். எனவே குறித்த கோரிக்­கை­கள் பத்­தி­னை­யும் எப்­போது நிறை­வேற்­று­வார் என்­பதை தலைமை அமைச்­சர் ஒரு கால அட்­ட­வ­ணைப் பிர­கா­ரம் அறி­வித்­தால் , அது தமிழ் மக்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக இருக்­கும்.

You might also like