ரணில் தனது பொறுப்பை உணர வேண்டும்!!

இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளும் ஒன்­றாக இருந்­தால் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண முடி­யும் என்ற நம்­பிக்­கை­யில்­தான் உங்­க­ளுக்கு எமது ஆத­ரவை வழங்­கி­னோம். ஆனால் நீங்­களோ, எதி­ரும் புதி­ரு­மாக இருந்து, வாக்­கு­று­தி­க­ளில் வில­கிச் செல்­கின்­றீர்­கள். நம்­பிய மக்­க­ளுக்கு மிகப்­பெ­ரும் அநீ­தியை இழைக்­கி­றீர்­கள்‘’ தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க­ வுக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் போது உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் உதிர்த்த கருத்­துக்­கள் இவை.

தமி­ழர் தாய­கத்­தி­னது ஏக்­கங்­கள்
கண்­ணா­டி­யா­கப் பிர­தி­ப­லிக்­கி­றது
சிவ­சக்தி ஆனந்­த­னின் உரை­யில்

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னின் உரை, தமி­ழர் தாயக மக்­க­ளின் உள்­ளக் கிடக்­கை­களை அப்­ப­டியே கண்­ணா­டி­யா­கப் பிர­தி­ப­லித்து நிற்­கி­றது. கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில், அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த தோற்­க­டிக்­கப்­பட்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்சி பீடம் ஏறு­வ­தற்கு தமி­ழர் தாயக மக்­க­ளின் வாக்­கு­களே முக்­கிய கார­ண­மாக அமைந்­தன. இதைப் பல மேடை­க­ளில் வைத்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஏற்­றுக்­கொண்­டுள்­ளார். தமிழ் மக்­க­ளின் உத­விக்­குப் பதி­லாக, தான் பதி­லு­தவி செய்­வேன் என்­றும் பல­முறை தெரி­வித்­துள்­ளார் அவர். ஆனால் தமிழ் மக்­க­ளின் கோரிக்­கை­கள் எதை­யும் அரச தலை­வர் நிறை­வேற்ற வில்லை. வடக்­குக்கு வரு­வ­தும் ‘டிமிக்கி’ கொடுத்­து­விட்­டுச் செல்­வ­து­மா­கத்­தான் அவர் செய்­யும் நன்­றிக்­க­டன் அமை­கி­றது.

ஏகப்­பட்ட கோரிக்­கை­க­ளு­டன்
தமி­ழர் தாய­கத்­தின் மக்­கள்

தமி­ழர் தாய­கம் அனு­தி­ன­மும் போராட்­டத்­து­டன்­தான் இன்று பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நிலைப்­பாடு தொடர்­பான வெளிப்­பாடு, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணி­கள் விடு­விப்பு, வடக்கு – கிழக்கு இணைப்பு, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் ஆகி­ய­வைதான் தமிழ் மக்­க­ளின் முக்­கிய கோரிக்­கை­க­ளாக உள்­ளன. இவற்­றில் ஒன்­றில்­கூட வடக்கு – கிழக்கு திருப்­திப்­ப­டும் படி­யான செயல்­வ­டி­வத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம­ சிங்க தலை­மை­யி­லான கூட்டு அரசு வெளிப்­ப­டுத்­த­வில்லை. ஒவ்­வொன்­றி­லும் ஏமாற்­றத்­தையே கொடுத்து வரு­கி­றது.

திருந்­த­ வேண்­டும் ரணில்

தனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்துக்கு எதிராக வாக்களித்துத் தனது பத­வி­யைத் தக்­க­வைக்க உத­வி­செய்ய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக் குறித்தும், அந்­தக் கட்சி பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் தமிழ் மக்­க­ள் குறித்தும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இனி­யா­வது சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். தன்­மீ­தான நம்­பிக்­கை­யில்­தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு தந்­தது என்­பதை உண­ர­வேண்­டும். கடந்த 2016ஆம் ஆண்டு நடை­பெற்ற தேசிய தைப்­பொங்­கல் விழா­வில் கலந்­து­கொண்­டி­ருந்த ரணில், ‘காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் எவ­ரும் உயி­ரு­டன் இல்லை’ என்று தெரி­வித்­தி­ருந்­தார். ‘வடக்கு – கிழக்கு இணைப்பு என்­பது சாத்­தி­ய­மற்­றது. கிழக்­கில் தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யாக இல்லை. வடக்­கில் தமி­ழர்­கள்­தான் பெரும்­பான்­மை­யி­னராக வாழ்கிறார்களா என்று தெரி­ய­வில்லை’ என்று இந்த வரு­டம் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்கு முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இவ்­வா­றாக சிங்­கள பேரி­ன­வா­தத்­தின் பார்­வைக்கு அஞ்­சி­யும், தனது சிங்­கள பௌத்த வாக்­கு­க­ளைத் தக்க வைப்­ப­தற்­கா­க­வும் கருத்­துக்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டி­ருப்­பதை விடுத்து, நியாயமானது எதுவோ அதை நிறை­வேற்ற அவர் முன்­வர வேண்­டும். ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்­லாத் தீர்­மா­னத்தை தோல்­வி­ய­டை­யச் செய்­த­தன் பின்­ன­ணி­யில் கூட்­ட­மைப்­பும் அதையே அவ­ரி­டம் எதிர்­பார்த்து நிற்­கி­றது. கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் தமிழ் மக்­க­ளின் விருப்பமும், தேவை­யும் அதுவே.

மக்­கள் ஆணையை
மீறு­வது அபத்­தமே!

கூட்டு அரசு என்­பது மக்­க­ளின் ஆணை. அதை அதன் ஆயுட்­கா­லம் முடி­வ­தற்கு முன்­னர் வலிந்து முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரு­வதை ஏற்க முடி­யாது. கூட்­டு­அ­ரசு கவிழ்ந்­தால் ஏகப்­பட்ட விட­யங்­கள் இயங்கு நிலை­யில் இருந்து விடு­ப­டும். அவற்­றில் முதன்­மை­யா­னது புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம். புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­க­மா­னது, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வைத்த கோரிக்­கை­க­ளான, வடக்கு – கிழக்கு இணைப்பு, திரும்­பப் பெறப்­பட முடி­யாத இறுக்­க­மான பொறி­மு­றை­யூ­டான அதி­கா­ரப் பகிர்வு, நிதித்­து­றைச் சுதந்­தி­ரம் ஆகி­ய­வற்­றில் இருந்து விலகி நீண்ட நாள்­க­ளா­யிற்று. எனி­னும், அதன் உரு­வாக்க முயற்­சி­யில் இருந்து கூட்­ட­மைப்பு பின்­வாங்­க­வில்லை, கைவி­ட­வில்லை. ஒவ்­வொரு தடை­க­ளை­யும், விமர்­ச­னங்­க­ளை­யும், நெருக்­க­டி­க­ளை­யும் புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கத்­தைக் கருத்­தில்­கொண்டே அது கடந்து வரு­கி­றது.

இவ்­வா­றி­ருக்க, இந்த அர­சைக் கலைத்­து­விட அல்­லது குலைத்­து­விட முயல்­வது தமி­ழர் தாய­கத்­தைப் பொறுத்த வரை­யில் அபத்­த­மா­னது. ஆக, தனது தலை தப்­பிக்க உத­வி­ய­வர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு தலைமை அமைச்­சர் செவி­சாய்க்க வேண்­டும். கூட்­ட­மைப்­பு­டன் செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்தை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும். அதை­வி­டுத்து வேதா­ளம் மீண்­டும் முருங்­கை­ மரத்தில் என்­ப­தைப்­போல் ஏமாற்­று­வித்தை காட்ட முய­லக்­கூ­டாது, இதற்கு முன்­பெல்­லாம் கைக்கொண்ட செயற்பாடுகள் போன்று.

You might also like