கரைச்சி, கரைது­றைப்­பற்று தவி­சா­ளர் தெரிவு இன்று!!

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் கரைச்­சிப் பிர­தேச சபை, முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கரைது­றைப்­பற்று பிர­ தேச சபை­க­ளின் தவி­சா­ளர் தெரிவு வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் ம.பற்­றிக் டிறஞ்­சன் தலை­மை­யில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

கரைச்­சிப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் தெரிவு காலை 9 மணிக்­கும், கரைத்­து­ரைப்­பற்­றுப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் தெரிவு மாலை 2 மணிக்­கும் இடம்­பெ­ற­வுள்­ளது.

கரைச்­சிப் பிர­தேச சபை­யின் 35 ஆச­னங்­க­ளில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 17 ஆச­னங்­க­ளும், சுயேச்­சைக் குழு 11 ஆச­னங்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன தலா 2 ஆச­னங்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்சி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, ஈ.பி.டி.பி. என்­பன தலா ஒவ்­வொரு ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே இந்­தச் சபை­யில் ஆட்சி அமைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச சபை­யின் 24 ஆச­னங்­க­ளில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 9 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சுயேச்­சைக் குழு­வும் தலா 3 ஆச­னங்­க­ளை­யும், ஈ.பி.டி.பி., தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி தலா 2 ஆச­னங்­க­ளை­யும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­பன தலா ஓர் ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளன.

இந்­தச் சபை­யி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே ஆட்சி அமைக்­கும் என்று எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.

You might also like