திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மகுடம்!!

விஜ­ய­ரெட்­ணம் ஞாபகார்த்­தக் கிண்­ணத்­துக்­காக நடத்­தப்­பட்ட ரி-–20 துடுப்­பாட்­டத் தொட­ரில், திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று மாலை இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் கே.ஸி.ஸி.ஸி. அணியை எதிர்த்து திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி மோதி­யது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கே.ஸி.ஸி.ஸி. அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 6 இலக்­கு­களை இழந்து 171 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது.

ஜன­தாஸ் ஓர் ஓட்­டத்­தால் சதத்­தைத் தவ­ற­விட்டு 99 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­ மி­ழந்­தார். பிர­தா­பன் 28 ஓட்­டங்­க­ளை­யும், ஜெய­ரூ­பன் 14 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் அனு­ர­தன் 3 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

171 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு, பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி, 17.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 6 இலக்­கு­களை இழந்து 172 ஓட்­டங்­க­ளைப் பெற்று வெற்­றி­பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக சுரேந்­தி­ரன் 89 ஓட்­டங் களை­யும், சிவ­ராஜ் 23 ஓட்­டங்­க­ளை­யும், தர்­சி­கன் 22 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.பந்­து­வீச்­சில் சத்­தி­யன் 2 இலக்­கு­களை வீழ்த்­தி­னார்.

ஆட்­ட­நா­யக­னாக திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழ­கத்­தின் சுரேந்­தி­ரன், தொட­ராட்ட நாய­க­னாக அதே அணி­யின் அசோக் ஆகி­யோர் தெரி­வு­செய்­யப்­பட்­ட­னர்.

You might also like