இராமகிருஷ்ணா நிலையம் தனது சேவையை பலவலாக்கம் செய்ய முன்வர வேண்டும்
கொழும்பில் ஓரிரு நாள்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கான வசதி கிட்டாமை குறித்து நான் தங்கள் பத்திரிகைகக்கு வரைந்த கடிதத்துக்கு கடந்த சனிக்கிழமை கே.எஸ்.சிவஞானராசா என்ற பெயருடைய உதயன் வாசகர் முக்கிய தகவலொன்றை வழங்கியிருந்தார்.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசனின் நிலையை அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் வருடத்தில் அரிதாகவே தேவை நிமித்தம் கொழும்புக்குச் செல்பவன். ஆனால் தங்குவதற்கு இடவசதிக்காக முதலில் நாடுவது இராமகிருஷ்ணமிசன் விடுதியைத்தான்.
அன்றும் அங்குபோய் ஏமாற்றத்துடனேயே திரும்பி னேன். இராமகிருஷ்ண மிஷன் வி।டுதி பிற இடங்களிலிருந்து கொழும்புக்கு வந்துசெல்லும் பயணிகளால் நிரம்பி வழிந்தது. அது அவ்விதம் நிரம்பி வழிவது ஒன்றும் புதுமையல்ல.
அதன் எளிமையையும் சேவையையும் அறிந்து அதை நாடுவோரின் தொகை அதிகரிக்க அதிகரிக்க நாடுவோர் அனைவரும் தங்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்து தமது இல்லத்தின் விடுதிச் சேவையை விரிவுபடுத்தி பொதுப்பணிபுரிய இராமகிருஷ்ண மிசன் நிர்வாகம் முன்வராதமை ஒரு முக்கிய குறையே.
குறிப்பிட்ட தினத்தன்றும் நான் அங்கு போய் தங்குமிட வசதி கிடைக்காததால் ஏமாந்து திரும்பிய வன்தான் எனது அந்த ஏமாற்றத்தாலும் வெளியிடத்தில் வசதி்க் குறைபாடுகளுடன் அதிக கட்டணம் செலுத்தித் தங்க நேர்ந்ததால் எற்பட்ட மன வெப்பிராயம் காரணமாகவுமே நான் எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த நேர்ந்தது.
இந்த விடயம் குறித்து இராமகிருஷ்ண மிசன் நிர்வாகம் அக்கறை காட்டிச் செயற்பட்டால் எம்மவர்களில் பலர் அதனால் பயன் ஈட்டிட இயலும்.