கரைச்சி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதல் அமர்வு இன்று கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

முதலில் தவிசாளர் தெரிவுக்கான முன்மொழிவுகள் இடம்பெற்ற போது தமிழரசு கட்சியின் அருணாசலம் வேழமாலிகிதன் முன்மொழியப்பட்டார்.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் ஜ. மோகன்ராஜ் எழுந்து ரஜனிகாந் என்பவரை மாற்றுத் தெரிவாக முன்மொழிந்தார்

பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 19 உறுப்பினர்கள் வேழமாலிகிதனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மாற்றுத் தெரிவான ரஜனிகாந்துக்கு 13 பேர் வாக்களித்தனர்.

You might also like