ஜப்பானில் நிலநடுக்கம்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஹோன்ஷூ தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து சாலைகளில் தஞ்சமடைந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வால் பல இடங்களில் கட்டடங்கள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 5 பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

100-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் நாள்களில் இந்த பகுதியில் கடுமையான சேதங்களை உருவாக்கும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

You might also like