மீண்டும் கிசுகிசுப்பில் சிக்கினார் நயன்தாரா!!

பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. அப்போது பிரபுதேவா- நயன்தாராவிற்கிடையே காதல் உருவாகி, கல்யாணம் வரை சென்றது.

ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் கல்யாணம் தடைபட்டது. அதன்பிறகு இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, அடுத்து அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை கேட்டிருப்பதாகவும் கொலிவூட்டில் செய்தி பரவியுள்ளது.

இது சாத்தியமா? என்று கேட்டால், சிம்புவைக் காதலித்து பிரிந்த நயன்தாரா பின்னர் அவருடன் இது நம்ம ஆளு படத்தில் நடிக்கவில்லையா? அதே மாதிரி நடிப்பு என்று வருகிற போது நயன்தாரா சொந்த விருப்பு வெறுப்புகளை பார்க்க மாட்டார். அதனால் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

You might also like