சவுதியில் மீண்டுமொரு சட்டம் தளர்த்தப்பட்டது!!

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள் செயல்பட ஆரம்பிக்கும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் மதக்கட்டுப்பாட்டுக்களை மீறுவதாக கூறி கடந்த 1983 ஆண்டு காலப்பகுதியில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

இதனால் தற்போது வரை சவுதி அரேபியாவில் திரையரங்குகள் இயங்கவில்லை. இந்த நிலையில் சவுதி அரேபியாவின் தற்போதைய இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான் விதிமுறைகள் சிலவற்றை தளர்த்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிராகக் காணப்பட்ட பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் தற்போது 35 ஆண்டுகளின் பின்னர் சவுதி அரேபியாவில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதி்ர்வரும் 18 ஆம் திகதி தியேட்டரில் ‘ப்ளாக் பேந்தர்’ படம் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷன் 2030 திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவுக்கு பொழுதுப்போக்குத் துறையை கொண்டு வருவதற்கான தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், சவுதியில் உள்ள 15 நகரங்களில், 40 திரையரங்குகள் திறக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

You might also like