தவ­று­க­ளைத் திருத்தி தீர்­வைப் பெறு­வோம்- சுமந்­தி­ரன் !!

எமது பக்­கத்­தில் நாம் விட்ட தவ­று­க­ளைத் திருத்­திக் கொண்டு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுத்­த­ரு­வோம் என்று தெரி­வித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ஏ. சுமந்­தி­ரன்.

யாழ்ப்­பா­ணம், வட­ம­ராட்சி கிழக்கு, செம்­பி­யன்­பற்று வடக்­கில் உள்ள பொது மண்­ட­பத்­தில் ஓய்­வு­பெற்ற தபால் அதி­பர் றோ.மது­ர­நா­ய­கம் தலைமை நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பிலே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்துள்­ள­தா­வது,

தற்­போது வாக்­க­ளிக்­கும் வீதம் எப்­ப­டி­யாக மாறி­யுள்­ளது என்­பது குறித்து நாங்­க­ளும் இப்­போது சிந்­தித்து வரு­கின்­றோம். இது மக்­க­ளு­டைய நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றதா? அல்­லது இது உள்­ளூ­ராட்­சிச் சபை என்ற கார­ணத்­தாலே தேசிய நிலைப்­பா­டு­களை விட்­டு­விட்டு மக்­கள் தங்­க­ளது பிர­தேச அபி­வி­ருத்­தியை மட்­டும் நோக்கி வாக்­க­ளித்­துள்­ளார்­களா? என்­பது குறித்து நாங்­கள் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கின்­றோம்.

வாக்­க­ளிக்­கும் முறை­யிலே ஏற்­பட்­டுள்ள மாற்­றத்­தின் கார­ண­மாக தேசிய அள­விலே நாங்­கள் அர­சு­டன் பேரம் பேசு­கின்ற சக்தி குறை­கின்­றதா என்ற கேள்வி எழு­கின்­றது. மக்­க­ளின் ஜன­நா­யக விட­யத்­தில் எந்­த­வி­த­மான மாற்­ற­மும் கிடை­யாது.

1956 ஆம் ஆண்­டில் இருந்து மக்­கள் ஒரே செய்­தி­யைச் சொல்­லி­வ­ரு­கி­றார்­கள் அதிலே எந்த மாற்­ற­மும் கிடை­யாது எனச் சொல்­லி­வந்­துள்­ளோம். அதை இந்த முறை தேர்­த­லிலே சொல்­ல­மு­டி­ய­வில்லை.

இது தொடர்­பில் நாங்­கள் சற்­றுச் சிந்­திக்­க­வேண்­டும். எங்­க­ளது நட­வ­டிக்­கை­யில் ஏற்­பட்ட குறை­பாடு கார­ணமா? மக்­களை சந்­திப்­ப­தில், அவர்­க­ளின் பிரச்­சி­னை­களை அறி­வ­தில் நாங்­கள் பின்­நிற்­கின்­றோமா? என்­பது குறித்து நாங்­கள் சிந்­திக்க வேண்­டும்.

அர­சி­யல் கட்­சி­யாக எங்­க­ளது பக்­கத்­தில் இருந்து நாங்­கள் விட்ட தவ­று­க­ளைத் திருத்­திக்­கொள்ள முய­ல­வேண்­டும். அத­னால்­தான்­தேர்­தல் முடிந்த கையோடு நாங்­கள் இந்த மக்­கள் சந்­திப்­பதை ஒழுங்கு செய்­துள்­ளோம்.

புதிய அர­ச­மைப்பு சாத்­தி­ய­மா­னால் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு கூடு­த­லான அதி­கா­ரங்­கள் கொடுக்­கப்­ப­டும். அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து அளிக்­கின்­ற­போது மத்­தி­யிலே இருப்­பது மாகா­ணத்­துக்கு மட்­டு­மல்ல நேர­டி­யாக உள்­ளூ­ராட்­சிச் சபைக்­கும் கொடுப்­ப­தாக உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.

மாகாண சபை­யின் விட­யங்­க­ளைச் சட்­ட­மாக்­கும் அதி­கா­ரம் மாகாண சபைக்கு இருந்­தா­லும் அதை நிறை­வேற்­றும் அதி­கா­ரம் உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­குக் கொடுக்­கப்­ப­ட­ வேண்­டும் என்ற முன்­மொ­ழிவு இருக்­கி­றது. அதன்­படி பார்த்­தால் உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளும் அர­சி­யல் அதி­கா­ரங்­க­ளைக் கூடு­த­லா­கப் பிர­யோ­கிக்­கும் சபை­க­ளாக மாறும்.- என்­றார்.

இந்­தச் சந்­திப்­பில் பருத்­தித்­துறை பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் அ.சா.அரி­ய­கு­மார், பருத்­தித்­துறை பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள், இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் மற்­றும் பொது­மக்­கள் எனப் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

You might also like