எதி­ர­ணி­யில் அமர்ந்து செயற்­பட அனு­ம­திக்க வேண்­டும் மைத்­திரி!!

கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யேறி நாடா­ளு­மன்­றத்­தில் எதி­ர­ணி­யில் அமர்­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்­டும் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வ­ளித்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் அரச தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் நேற்­றுக் கோரிக்கை விடுத்­த­னர்.

அர­சி­லி­ருந்து வில­கி­னா­லும் அரச தலை­வ­ருக்­கான ஆத­ரவு தொட­ரும் என்­றும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை கைவிட்டுச் செல்­ல­மாட்­டோம் என்­றும் அவர்­கள் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக மகிந்த அணி­யால் முன்­வைக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆறு அமைச்­சர்­கள் உட்­ப­டப் 16 பேர் ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.

தீர்­மா­னத்தை ஆத­ரித்த சு.க. உறுப்­பி­னர்­கள் கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யேற வேண்­டும் என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி வலி­யு­றுத்­தி­ய­து­டன், அந்­தக் கட்­சி­யின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் சு.கவின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் முன்­வைக்­கும் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை இரவு கொழும்­பில் சந்­திப்­பொன்று நடை­பெற்­றது.

பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த கூட்­ட­ர­சி­லுள்ள சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­களை வெளி­யேற்­ற­வேண்­டும் என்ற ஐ.தே.கவின் முடிவு அரச தலை­வ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது சம்­பந்­த­மாக நாளை­ம­று­தி­னம் (நேற்று) நடை­பெ­றும் மத்­திய செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் ஒன்று எடுக்­கப்­ப­டும் என அரச தலை­வ­ரால் பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழுக் கூட்­டம் ஜனா­தி­ப­தி­யின் இல்­லத்­தில் நேற்­றி­ரவு 7 மணிக்­குக் கூடி­யது. நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த உறுப்­பி­னர்­க­ளும் மத்­திய குழு கூட்­டத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்கு முன்­னர் தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்த சு.க. உறுப்­பி­னர்­கள் இரா­ஜாங்க அமைச்­சர் லக்ஷ்­மன் யாப்பா அபே­வர்­த­ன­வின் இல்­லத்­தில் கூடி பேச்சு நடத்­தி­யுள்­ள­னர்.

அமைச்­சுப் பத­வி­க­ளைத் துறந்து கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்­டும், பொது எதி­ர­ணி­யான மகிந்த அணி­யு­டன் இணை­யா­மல் எதி­ர­ணி­யில் மட்­டும் இருக்­க­வேண்­டும், எதி­ர­ணி­யில் இருந்­தா­லும் அரச தலை­வ­ருக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டும், சுதந்­தி­ரக் கட்­சியை விட்டு வெளி­யே­றக்­கூ­டாது போன்ற தீர்­மா­னங்­கள் இந்­தச் சந்­திப்­பில் ஏக­ம­ன­தாக எடுக்­கப்­பட்­டுள்­ளன.

இக்­கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை மத்­திய செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் முன்­வைத்­துள்­ள­னர். இது பற்றி விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.
எனி­னும் இந்­தச் செய்தி நேற்­றி­ரவு அச்­சுக்­குச் செல்­லும் வரை சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வில் இறு­தி­யாக எடுக்­கப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்வ முடி­வு­கள் எது­வும் வெளி­யா­க­வில்லை.

எனி­னும், சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஒரு குழு கூட்­ட­ர­சில் தொடர்ந்­தும் அங்­கம் வகிக்­கும் என்­றும், தலைமை அமைச்­சரை எதிர்த்து வாக்­க­ளித்­த­வர்­கள் மகிந்த அணி­யு­டன் (பொது எதி­ரணி) எதி­ர­ணி­யில் மட்­டும் அமர்­வார்­கள் என்­றும் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

You might also like