கரைதுறைப்பற்று சபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சி!!

40 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நேற்று நடை­பெற்ற முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச சபை அமர்­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. ஈ.பி.டி.பி., சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், ஐ.தே.க, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­பன கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கின.

தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரி­வு­க­ளுக்­காக நேற்று பிற்பகல் 2 மணிக்கு உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் பற்­றிக் டிறஞ்­சன் தலை­மை­யில் கரை­து­றைப் பற்­றுப் பிர­தேச சபை கூடி­யது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தவி­சா­ளர் வேட்­பா­ள­ராக கன­கையா தவ­ரா­சாவை முன்­மொ­ழிந்­தது. சுயேச்­சைக் குழு தவி­சா­ளர் வேட்­பா­ள­ராக ஜோசப் அம­ல­தாஸை முன் மொ­ழிந்­தது. பெரும்­பான்­மை­யா­ன­வர்­கள் பகி­ரங்க வாக்­கெ­டுக்­குப்பு விருப்­பம் தெரி­வித்­த­தால் பகி­ரங்க வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. கன­கையா தவ­ராசா 17 வாக்­கு­க­ளை­யும், ஜோசப் அம­ல­தாஸ் 3 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர்.

ஈ.பி.டி.பி., சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், ஐ.தே.க, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­பன கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கின. தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி என்­பன நடு­நி­லமை வகித்­தன.

உப தவி­சா­ளர் தெரி­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இ.ரவீந்­தி­ரனை முன்­மொ­ழிந்­தது. வேறு எவ­ரும் முன்­மொ­ழி­யப்­ப­டா­த­தால் ஏக­ம­ன­தாக இ.ரவீந்­தி­ரன் தெரி­வி­னார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ. சுமந்­தி­ரன், சி. சிவ­மோ­கன், வடக்கு மாகா­ண­சபை விவ­சாய அமைச்­சர் சிவ­னே­சன், உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், எம்.கே விவா­ஜி­லிங்­க­ளம், புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் சபை அமர்­வு­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர்.

கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச சபை­யின் 24 ஆச­னங்­க­ளில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 9 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சுயேச்­சைக் குழு­வும் தலா 3 ஆச­னங்­க­ளை­யும், ஈ.பி.டி.பி., தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி தலா 2 ஆச­னங்­க­ளை­யும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­பன தலா ஓர் ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளன.

You might also like