வெளிப்­ப­டைத் தன்­மை­யும் நீதி­யும் முக்­கி­யம்!!

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீது மீண்­டும் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது இப்­ப­டிப்­பட்ட மோசடி அல்­லது முறை­கேட்­டுக் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­ப­டு­வது இது இரண்­டா­வது முறை.

ஏற்­க­னவே இருந்த அமைச்­சர்­க­ளும் மீதும் இது­போன்ற குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன. இதை­ய­டுத்து அந்­தக் குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க முத­ல­மைச்­சர் ஒரு குழுவை நிய­மித்­தார். ஓய்­வு­பெற்ற நீதி­பதி தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட அந்த மூவர் குழு வழங்­கிய விசா­ரணை அறிக்­கை­யில் அமைச்­சர்­கள் நால்­வ­ரில் இரு­வர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை வெளியே கசிந்­ததை அடுத்து அதனை முழு­மை­யாக மாகாண சபை­யில் முன்­வைக்க வேண்­டிய நிலைக்கு முத­ல­மைச்­சர் தள்­ளப்­பட்­டார். விசா­ர­ணைக்­குழு நட­வ­டிக்கை எடுக்­கப் பரிந்­து­ரைத்த அமைச்­சர்­கள் இரு­வ­ரும் முத­ல­மைச்­ச­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்­தார்­கள்.

இத­னால் அவர்­க­ளைப் பத­வி­யைத் தியா­கம் செய்­யும்­படி கேட்ட முத­ல­மைச்­சர், மற்­றைய இரு­வர் மீதான குற்­றச் சாட்­டுக்­க­ளை­யும் விசா­ரிப்­ப­தற்கு புதிய குழு ஒன்று நிய­மிக்­கப் ப­டும் என்று அறி­வித்­தார். அதற்கு வச­தி­யாக அந்த இரு அமைச்­சர்­க­ளும் கட்­டாய விடுப்­பில் செல்­ல­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

இந்த விவ­கா­ரம் பூதா­க­ர­மா­கி­யதை அடுத்து அந்த இரு­வ­ரும் தமது பத­வி­க­ளில் இருந்து வில­கி­னர். இதை­ய­டுத்து அவர் களின் இடத்துக்கு இரு­வர் தற்­கா­லிக அமைச்­சர்­க­ளாக மூன்று மாதங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்று முத­ல­மைச்­சர் அறி­வித்­தார். 3 மாதங்­கள் கடந்த பின்­ன­ரும் அந்­தத் தற்­கா­லிக அமைச்­சர்­கள் தொடர்ந்­தும் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். முந்­திய அமைச்­சர்­கள் இரு­வ­ருக்கு எதி­ராக நடத்­தப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்ட விசா­ரணை பற்றி இப்­போது மூச்­சும் இல்லை.

மாகாண சபை­யின் மார்ச் மாத வழக்­க­மான அமர்­வில் இந்த விசா­ர­ணைக் குழு குறித்­துக் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது, அமைச்­ச­ர­வையை மாற்றி அமைக்க நினைத்­த­தால்­தான் விசா ­ர­ணைக் குழு ஒன்­றையே நிய­மித்­தேன் என்று முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் வலு இல­கு­வா­கச் சொல்­லி­விட்­டுப் போய்­விட்­டார்.

இத்­த­கை­ய­தொரு நிலை­யி­லேயே அவ­ரது அமைச்­ச­ரவை மீது மீண்­டும் முறை­கேட்­டுக் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் சில குறித்து முத­ல­ மைச்­ச­ரும் அறிந்தே இருக்­கி­றார். அவை அவ­ரது கவ­னத்­திற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது, அதனை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்­யு­மாறு குறிப்­பிட்ட அமைச்­ச­ருக்­கும் அதி­கா­ரி­க­ளுக்­கும் கூறி­ய­து­டன் அந்த விட­யத்தை முடித்­துக்­கொண்­டார் முத­ல­மைச்­சர். அது குறித்து விசா­ரிப்­ப­தற்கு குழு எத­னை­யும் நிய­மிப்­பது குறித்து அவர் சிந்­திக்­க­வில்லை.

ஒரு­வேளை இந்த அமைச்­ச­ர­வை­யில் இருப்­ப­வர்­கள் அவ­ருக்கு வேண்­டி­ய­வர்­க­ளாக, மாற்­றப்­ப­டக்­கூ­டா­த­வர்­களா இருப்­ப­த­னால் அவர் விசா­ர­ணைக் குழு எத­னை­யும் நிய­மிப்­பது குறித்­துச் சிந்­திக்­கா­மல் இருந்­தி­ருக்­க­லாம். ஆனால், முன்­வைக்­கப்­ப­டும் குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்து விசா­ரித்து அதன் உண்­மைத் தன்­மையை மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது முத­ல­மைச்­ச­ரின் கடமை.

தனது முத­லா­வது அமைச்­ச­ரவை மீதான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரித்த குழு­வின் அறிக்­கையை மாகாண சபை­யில் முன்­வைத்­த­போது, தனது ஆட்சி வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் நடந்து கொள்­வ­தன் சாட்­சியே இந்த அறிக்கை என்று முத­ல­மைச்­சர் சொல்­லி­யி­ருந்­தார். அதே வெளிப்­ப­டைத் தன்­மை­யு­டன் அவர் இப்­போ­தும் செய­லாற்­ற­வேண்­டும்.

இல்­லை­யேல், அமைச்­சர்­களை மாற்­ற­வேண்­டும் என்­கிற தனது சொந்த நல­னுக்­காக விசா­ர­ணைக் குழு அமைத்த முத­ல­மைச்­சர் என்­கிற பெய­ரு­டன் அவர் வர­லாற்­றில் நிலைக்­க­வேண்­டி­யி­ருக்­கும். சின்­னதோ பெரிதோ அமைச்­சர்­கள், அர­சி­ யல்­வா­தி­கள் முறை­கே­டு­க­ளில், மோச­டி­க­ளில், ஊழல்­க­ளில் ஈடு­ப­டு­வது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மு­டி­யா­தது. அவை ஆரம்­பத்­தி­லேயே களை­யப்­ப­ட­வேண்­டும். ஒரு நீதி­ய­ர­ச­ராக இருந்த முத­ல­மைச்­ச­ருக்கு இதை வெளி­யார் யாரும் சொல்­லித் தெரி­ய­வைக்கவேண்­டும் என்­ப­தில்லை. வெளிப்­ப­டைத் தன்­மை­யும் நீதி­யும் நிலை­நாட்­டப்­ப­டு­வது அவ­சி­யம்­.

You might also like