சவாலை முறியடித்து அரசியல் இருப்பை உறுதிப்படுத்தினார் தலைமை அமைச்சர்!!

முன்­னர் பல சந்­தர்ப்­பங்­க­ளில் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­களை விட, இந்­தத் தடவை கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தொன்­றாக அமைந்­தது. அதன் முடிவு தற்­போது வெளி­யா­கி­விட்­டுள்­ளது. அத­னது பின்­ன­ணி­யும் ஆச்­ச­ரி­ய­மா­ன­தொன்றே.

இது விட­யத்­தில் இர­க­சி­ய­மான செயற்­பா­டு­கள் சில­வும் அரங்­கே­றி­யி­ருந்­தன. வெளிப்­ப­டை­யா­கத்­தோன்­றாத, உள்­ளுக்­கும் பெருந் தீச்­சு­வா­லை­யா­கப் பற்­றி­யெ­றிந்த, கட்­டுக்­கள் தளர்த்­தப்­பட்ட செயற்­பா­டு­கள் சில அரங்­கே­றி­யி­ருந்­தன.

நம்­பிக்­கை­யில்­லாத்  தீர்­மா­னம் தொடர்­பில் கூட்டு எதி­ர­ணி­யி­னது  கருத்­துக்­கள்

கடந்த மூன்­றாம் திக­தி­யன்று, நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ன­மென்ற மேடை­நா­ட­கக் காட்சிகள் நாடகத்தின் கதை வசன கையெ­ழுத்­துப் பிர­திக­ளுக்கு அமை­வாக அல்­லாது, திடீ­ரென மேடை­யில் அரங்­கே­றிய காட்­சி­க­ளாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லா­வின் வழி­ந­டத்­த­லில் நடந்து முடிந்­தன.

நாட்­டையே நாச­மாக்­கும் இந்த அரசை அதி­கா­ரத்­தி­லி­ருந்து அகற்ற, சகல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ணை­யுங்­கள். பெரும் வாக்கு வித்­தி­யா­சத்­தில் நாம் வெற்றி பெறு­வது உறுதி எனக் கர்ச்­சித்­தார் பொது எதி­ர­ணி­யைச் சேர்ந்த தினேஷ் குண­வர்த்­தன.

மகிந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தில் கையெ­ழுத்­தி­டா­வி­டி­னும், எதிர்­வ­ரும் 5ஆம் திகதி சூரி­யன் உதிக்­கும் வேளை இந்த அரசு வீழ்ச்சி கண்­டி­ருக்­கும் எனக் கொக்­க­ரித்­தார் விமல் வீர­வன்ச. மதிப்­போடு தமது பத­வி­யைத் தாமாக கைவி­டு­வ­தைத் தவிர ரணி­லுக்கு வேறு மார்க்­க­மே­து­மில்லை என ஆவே­ச­மா­கக் குரல் எழுப்­பி­னார் உதய கம்­மன்­பில.

மேற்­கண்­டவை யாவும் கடந்த இரண்­டாம் திக­தி­வரை கூட்டு எதி­ரணி முக்­கி­யஸ்­தர்­கள் வெளி­யிட்டு வந்த கருத்­துக்­க­ளா­கும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பினரும் முஸ்­லிம் காங்­கி­ர­ஸ் உறுப்பினர்க ளும் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிப்­பார்­களா? எதிர்ப்­பார்­களா? என்­பது உறு­தி­யாகாதி­ருந்­த­ போ­தி­லும், பிரே­ரணை விவாதத் துக்கு எடுக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­ரேயே, முஸ்­லிம் காங்­கி­ரஸ் அதனை எதிர்ப்­ப­தென முடிவு செய்து விட்­டி­ருந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­கள் மற்­றும் அவற்­றின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் ஒரு போதும் இரு தரப்­புக்­க­ளாக பிரிந்து வாக்­க­ளிக்­க­மாட்­டார்­கள் என்­ப­தில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் கடும் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்.

தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­கள் குறித்து தலைமை அமைச்­சர் ரணி­லு­டன் கலந்­து­ரை­யாடி தீர்­வு­கண்­டு­விட முடி­யு­மென கூட்­ட­மைப்­பி­னர் மத்­தி­யில் நம்­பிக்கை நில­வி­யது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மட்­டுமே ரணி­லுக்கு எதி­ரான கருத்­தைக் கொண்­டி ­ருந்­த­து­டன், தமிழ் மக்­க­ளது எதிர்­கால நல்­வாழ்வு குறித்த விட­யமே அதில் முக்­கி­ யத்­து­வம் வாய்ந்­த­தாக அமைந்­தது.

ஆயி­னும் மகிந்­த­வின் கூட்டு முன்­ன­ணித் தரப்பு ரணி­லுக்கு எதி­ரா­கக் கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க இய­லாத சிறைப்­பட்ட நிலை விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. ஆத­லால் வாக்­க­ளிப்­பில் கலந்து கொள்­வ­தைத் தவிர்ப்­ப­தை­விட, நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யைத் தோற்­க­டிப்­ப­தற்­காக, பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்­டிய நிலை தமி­ழர் தரப்­புக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

தலைமை அமைச்­ச­ருக்கு  எதிராகச் செயற்பட்ட ஐ.தே.கட்சியினர்

ஆத­லால் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­மைப்­பி­ன­தும், முஸ்­லிம் காங்­கி­ர­ஸி­ன­தும் ஆத­ர­வைப் பெற ரணி­லின் தரப்­பி­னர் அதி­க­பட்ச முயற்­சியை மேற்­கொண்­ட­னர். ஆயி­னும் குறித்த இரு தரப்­பி­னர்­கள் எத்­த­கைய முடிவை மேற்­கொள்­ளக்­கூ­டு­மென்­ப­தில் நிச்­ச­ய­மற்ற தன்­மை­யும் நில­வி­யது.

முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­கள் தீர்த்­தி­டத் தக்­க­வை­யாக இருந்­த­தால், ரணில் தரப்­பி­னர் முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் ஆத­ர­வைத் தம்­பக்­கம் ஈட்­டிக்­கொள்ள வாய்ப்­புக்­கிட்­டி­யது.

குறித்த இரு தரப்­பி­ன­ரது ஆத­ர­வும் ரணி­லுக்­குக் கிட்­ட­வுள்­ள­தாக நம்­பப்­பட்ட நிலை­யில், ஐ. தே. முன்­ன­ணி­யில் யானைச் சின்­னத்­தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற ஐ. தே. கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் சில­ரது செயற்­பா­டு­கள், அவர்­க­ளது கருத்து வெளிப்­பா­டு­கள் ரணிலை விமர்­சிக்­கும் வகை­யில் அமைந்­தமை ரணி­லுக்­குத் தலை­வ­லியை ஏற்­ப­டுத்­தக்­கா­ர­ண­மா­கி­ன.

அந்தக் குழு­வில் ஏழு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் செயற்­ப­டு­வ­தா­க­வும், அவர்­களை ரணி­லுக்கு எதி­ராக வழி நடத்­து­வது ரத்ன தேரரே என­வும் தக­வல்­கள் வெளி­யா­கின.குறித்த குழு­வி­னர் குறித்த அவ­தா­ன­மாக இருக்­கு­மா­றும், ஐ. தே.கட்­சிக்கு விசு­வா­ச­ மான ஏனைய ஐ. தே. கட்­சி­யின் நாடா­ளு­ மன்ற உறுப்­பி­னர்­களை இந்த குழு ­வி­னர் தமது பக்­கத்­துக்கு இழுத்­துக்கொள்ள இட­ம­ளிக்­கா­மல் கவ­னம் செலுத்­து­மா­றும் ரணி­லுக்கு கடும் ஆத­ரவு வழங்­கும் ஐ. தே. கட்­சி­யின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தரப்பு எச்­ச­ரிக்கை விடுத்து வந்­தது.

அத்­த­கைய நிலைப்­பாட்டை எவ்­வி­தம் கையாள்­வது என்­பது குறித்து குழப்­ப­ம­டை­யும் நிலைக்கு ரணில் தள்­ளப்­பட்­டார். அவ­ருக்கு அடுத்­த­டுத்து வந்த எச்­ச­ரிக்­கை­கள் அவ­ரைக் குழப்­பத்­தில் ஆழ்த்­தின.

ஆயி­னும் இவற்­றுக்கு மத்­தி­யில் ரணிலை குறித்த சவா­லில் வெற்­றி­பெற வைக்­கும் முயற்­சி­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளல்­லாத ஐ. தே. கட்­சி­யின் ஆத­ர­வா­ளர்­க­ளான பல­ரும் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அத்­த­கைய ஐ. தே. கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள் தரப்பு, கட்­சி­யின் புன­ர­மைப்பு என்ற விட­யத்தை முன்­வைத்து, அதை­யொரு சாட்­டா­கக் கொண்டு, வாக்­க­ளிப்­பில் கலந்துகொள்­ளாது தவிர்த்­தல், மற்­றும் ரணி­லுக்கு எதி­ராக வாக்­க­ளித்­தல் போன்ற நிலைப்­பா­டு ­க­ளி­லுள்ள ஐ. தே.கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எவ­ரெ­வ­ரெ­னத் தாம் இனங்­கண்­டி­ருப்­ப­தா­க­வும், அவர்­க­ளு­டன் பேசி அவர்­களை தமது பக்­கம் திருப்ப நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மா­றும் ரணி­லுக்கு அறி­வு­றுத்­தி­யது.

ரணிலின் வெற்றி குறித்து  அச்­சம் கொண்­டி­ருந்த
மகிந்த தரப்பு  உறுப்­பி­னர்­கள் சிலர்

இத­னி­டையே மகிந்த தரப்­பில் மகிந்­த­வுக்கு ஆத­ர­வான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு தரப்­பி­னர், ரணில் எப்­ப­டி­யா­வது தமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யைத் தோற்­க­டித்து விடு­வார் என்ற ஐயத்­து­டன் தமக்­குள் கருத்­துப் பரி­மா­றிக் கொண்­ட­தை­யும் அவ­தா­னிக்க முடிந்­தது. அதே­வேளை குறித்த சவா­லில் ரணி­லைக் காப்­பாற்ற முன்­னின்ற இளம் ஆத­ர­வா­ள­ரொ­ரு­வர் ‘‘இந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை தோற்­க­டிக்க எவ­ருமே எதிர்­பா­ராத சக்­தி­யொன்று உதவி செய்­யக்­கூ­டும்.

பிரே­ரணை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டும் சம­யமே, அது குறித்­துத் தெரி­ய­ வ­ரும். அவர்­கள் மௌன­மாக இருந்து கடைசி நிமி­டத்­தில் வேலை­யைக் காட்­டு­வதை பார்க்­கத்­தான் போகி­றோம். அவர்­கள் அவ்­வி­தம் ரணிலை காப்­பாற்­றி­னால் நாம் அவர்­க­ளைப் பாது­காப்­போம். எமது புதிய பய­ணத்­தில் அவர்­க­ளை­யும் இணைத்­துக் கொள்­வோம். அந்த வகை­யில் அவர்­கள் எதிர்­கா­லத்­தில் ஐ. தே. கட்­சி­யின் உயர் பிர­மு­கர்­க­ ளாக ஆக­வும் இட­முண்டு என­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத்­த­கைய பின்­ன­ணி­யில் குறித்த நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக 120 வரை­யான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது ஆத­ரவு வாக்­கு­கள் கிட்­டு­மென ரணி­லுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆயி­னும் அது குறித்து பூரண நம்­பிக்கை வைக்­காத ரணில், எதிர்­பா­ராத இடத்­தில் தவறு ஏற்­பட்டு விடு­மா­னால், மேல­திக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது ஆத­ரவை முற்­கூட்­டியே தேடி எம்மை நாம் பலப்­ப­டுத்­திக் கொள்­வது சிறப்பு எனத் தெரி­வித்து, வேறு எந்­தத் தரப்­பி­னது ஆத­ர­வை­யும் பெற்­றுக்­கொள்ள வாய்ப்­பி­ருக்­கு­மா­னால் அத­னை­யும் முயற்­சித்து பெற்­றுக்­கொள்­ளு­மாறு கூறி­வைத்­தார்.

கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கட்­டுக்­குள் வைத்­தி­ருந்­தார் ரணில்

ரணி­ல் குறித்த சவா­லில் வெற்­றி­பெற வைக்­கப்­போ­ரா­டிய ரணி­லின் தீவிர ஆத­ர­வா­ளர் தரப்பு, நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட தினத்­தன்று, நாடா­ளு­மன்ற ‘’ லொபி ‘’யில் பிர­வே­சித்­த­போதே ரத்­ன­தே­ரர் ரணி­லுக்கு எதி­ரா­கச் செயற்­பட இருப்­ப­தைத் தடுத்­திட இய­லா­தென்­பதை உணர்ந்து கொண்­ட­னர்.

சில வேளை அவர் வாக்­க­ளிப்­பில் கலந்து கொள்­வ­தைத் தவிர்க்­கக் கூடு­மெ­னக் கரு­தி­னர். ஆனால் ஐ.தே.கட்­சி­யின் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­வது தமக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­வாரா? என்ற ஐயம் ரணி­லின் மன­தில் நில­வி­யது. தமக்­கெ­தி­ரா­கச் செயற்­ப­டக்­கூ­டு­மென சந்­தே­கப்­ப­டும் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் மீண்­டும் மீண்­டும் பேசி அவர்­க­ளது மனங்­க­ளைத் தமது பக்­கம் திருப்­பு­மாறு கிடைத்த அறி­வு­றுத்­தலை முறைப்­படி ரணில் கையாண்டு தமது முயற்­சி­யில் வெற்றி கண்­டார்.

ரணி­லுக்கு எதி­ரான கருத்து நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருந்த போதி­லும் சில எதிர்த் த­ரப்பு மைத்­தி­ரி­பால ஆத­ரவு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் குறித்த விட­யத்­தில் மைத்­தி­ர­பால குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு பங்­க­ளிப்பு வழங்­கு­வ­தாக ரணி­லுக்­குத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஆனால் கூட்­ட­ர­சொன்றை உரு­வாக்க முக்­கிய பங்­காற்­றிய சுதந்­தி­ரக்­கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர்­கள் சிலர், நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை தொடர்­பாக சுயா­தீ­ன­மாக செயற்­பட முடிவு செய்­தமை குறித்த தக­வல் அரச தலை­வர் அறிந்­தி­ராத ஒன்­றல்ல.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவோ தமக்கு விருப்­ப­மான விதத்­தில் பெரும்­பா­லான சுதந் தி­ரக்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வாக்­க­ளிப்­பைப் பகிஷ்­க­ரிக்க வைப்­பிப்­ப­தன் மூலம், நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­ளைச் சிர­ம­மான சிக்­க­லான நிலைக்கு இட்­டுச்­செல்­வ­தற்கே ஆர்­வம்­காட்­டிச் செயற்­ப­டு­வ­தாக சுதந்­தி­ரக்­கட்­சி­யின் நடு­நிலை நிலைப்­பாடு கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கரு­தி­னர். இந்­தச் செய்தி ரணி­லுக்கு உட­னுக்­கு­டன் கிட்­டி­வந்­தமை அரச தலை­வ­ருக்கு பெரும் தலை­வ­லி­யாக அமைந்­தது.

ஆயி­னும் அர­சில் அங்­கம் வகித்­துக் கொண்டே அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தால், அத்­த­கைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அதன் பின்­னர் தொடர்ந்­தும் அதே அர­சில் இருப்­பது குறித்து, பிரே­ர­ணையை எதிர்க்­கும் தரப்­பி­னர் ஆட்­சே­பனை தெரி­விப்­பது சட்­டப்­படி செல்­லு­ப­டி­யற்­ற­தென்­பது சட்ட வல்­லு­நர்­க­ளது கருத்­தாக அமைந்­தி­ருந்­தது.

உண்­மை­யில் அரசு என்­பது அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் உள்­ளிட்ட அமைச்­ச­ர­வை­யால் நிர்­வா­கிக்­கப்­ப­டும் நிறு­வ­ன­மா­கும். அந்த நிலை­யில், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக அரச தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் செயற்­ப­டு­வ­தென்­பது ஒட்­டு­மொத்த அர­சை­யும் கவிழ்க்க முய­லும் செயற்­பாட்டை ஒத்­த­தா­கும்.

அத்­த­கைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அரச தலை­வர் தொடர்ந்­தும் அர­சில் அங்­கம் வகிக்க அனு­ம­திக்க முயற்­சித்­தால், அது­ நியா­ய­மா­ன­தொன்­றல்ல. சட்­டப்­ப­டி­யாக இத்­த­கைய புதிய மோதலை முறி­ய­டிக்க இய­லும். அந்த வகை­யில் புதிய சட்ட மூலத்தை உரு­வாக்­கும் வழக்­குத் தீர்ப்பு கிட்­டக்­கூ­டும். ஆத­லால் அர­சுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் அமைச்­சர்­களை உள்­ள­டக்­கா­மலே அரசு தொடர்ந்து செயற்­ப­ட­வேண்டி ஏற்­ப­டும் என­வும் சட்ட வல்­லு­நர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

அந்த வகை­யில் தன்­மீ­தான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யில் ஏதோ ஒரு விதத்­தில் தப்­பிப்­பி­ழைத்­துக் கொண்ட ரணில், தற்­போது தமக்­கெ­தி­ராக செயற்­பட்ட அமைச்­சர்­கள் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பழி­வாங்­கும் வகை­யில் செயற்­ப­டாது கட்சி மட்­டத்­தில் எழும் கோரிக்­கை­கள், தமது ஆத­ர­வா­ளர்­கள் தரப்பு மட்­டத்­தில் முன்­வைக் கப்­ப­டும் கோரிக்­கை­கள், நாட­ளா­விய ரீதி­யில் முன்­வைக்­கப்­ப­டும் யோச­னை­க­ளுக்­குக் காது கொடுத்து இளம் பரம்­ப­ரை­யி­னரை அர­சி­ய­லில் முன்­ன­ணிக்­குக் கொண்டு வரத்­தக்க வகை­யி­லான கட்­சிப் புன­ர­மைப்­புச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது மிக­மிக அவ­சி­ய­மா­கி­றது. அவ்­வித செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட ரணில் தவ­று­வ­ரா­யின் அவர் அர­சி­ய­லில் போர்க்­கி­ட­மற்­ற­தொரு பார­தூர நிலைக்கு உட்­பட நேரி­டு­மென்­பது நிச்­ச­ய­மா­னதே.

You might also like