சிரி­யா­வுக்கு அமெ­ரிக்கா எச்­ச­ரிக்கை!!

சிரி­யா­வில் அரச படை­கள் நேற்­று­முன்­தி­னம் நடத்­தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டும் இர­சா­ய­னத் தாக்­கு­த­லில் சுமார் 100 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில், ‘‘இந்­தத் தாக்­கு­த­லுக்கு சிரியா மிகப்­பெ­ரும் விலை­யைக் கொடுக்­கும்’’ என்று எச்­ச­ரித்­தது அமெ­ரிக்கா.

சிரி­யத் தலை­ந­கர் டமஸ்­க­ஸூ­டன் எல்­லை­யைப் பகி­ரும் கவுட்டா நக­ரில் அண்­மைக் கால­மாக போர் இடம்­பெற்று வரு­கி­றது. சிரிய அதி­பர் அசாத்­துக்கு எதி­ரான ஆய­தக் குழு­வின் பிடி­யில் இருந்த இந்த நக­ரம் தற்­போது அரச தரப்­பின் கட்­டுப்­பாட்­டுக்­குள் வரும் நிலையே உள்­ளது.

அங்கு, நேற்­று­முன்­தி­னம் உலங்கு வானூர்­தி­கள் மூலம் இர­சா­ய­னத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. இந்­தத் தாக்­கு­த­லில் சுமார் 100 பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் சிறு­வர்­கள். சிரி­யா­வில் செயற்­பட்­டு­வ­ரும் மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம் இந்­தத் தாக்­கு­தலை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அரச தரப்பே இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டும் நிலை­யில் சிரி­யா­வுக்­குத் தனது கண்­ட­னத்­தைப் பதி­வு­செய்­தது அமெ­ரிக்கா.‘‘சிரி­யா­வின் மதி­கே­டான இர­சா­யன தாக்­கு­த­லில் குழந்­தை­கள், பெண்­கள் உள்­பட பலர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட பகு­தி­களை வெளி­யு­ல­கத்­தி­னர் பார்க்க முடி­யா­த­வாறு அங்கு சிரிய இரா­ணு­வத்­தி­னர் குவிக்­க ப்­பட்­டுள்­ள ­னர். அசாத் என்­னும் மிரு­கத்தை ஆத­ரித்­து­வ­ரும் ரஷ்யாவும், ஈரா­னும் இந்­தத் தாக்­கு­த­லுக்­குப் பொறுப்­பேற்க வேண்­டும், இதற்கு மிகப்­பெ­ரிய விலையை தர­வேண்­டி­யி­ருக்­கும்’’ என்று எச்­ச­ரித்­தார் ட்ரம்ப்.

You might also like