ஆசிரியரை மோதித்தள்ளிய இராணுவ வாகனம்

இரணைமடு கனகாம்பிகைக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் 65 வயதுடைய ஓய்வு நிலைய ஆசிரியரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன இராணுவ வாகனம் மோதியே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like