துப்பாக்கியுடன் இருவர் கைது!!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிரிவுக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like