மன்னார் நகர சபையும் தழிழ்க் கூட்டமைப்பிடம் !!

மன்னார் நகர சபையில் அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தவிசாளர் மற்றும் உப தவிசாளராக தமிழ்
தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர சபையின் முதலவாது அமர்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் ஆகிய இருவரும் முன் மொழியப்பட்டனர்.

ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் 8 வாக்குகளைப் பெற்று மன்னார் நகர சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

-மேலும் உப தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன் 8 வாக்குகளைப் பெற்று உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

You might also like